வியாழக்கிழமை பிற்பகல் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள ஹைவே 427 இல் (Highway 427) இடம்பெற்ற ஒற்றை வாகன விபத்தில் (single-vehicle crash) 81 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பின்ச் அவென்யூ வெஸ்ட் (Finch Avenue West) பகுதிக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதைகளில் (northbound lanes), பிற்பகல் 2 மணியளவில் கார் ஒன்று பாதுகாப்பு இரும்புத் தடுப்பில் (guardrail) மோதி விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) தெரிவித்துள்ளனர்.
மிசிசாகா (Mississauga) நகரைச் சேர்ந்த அந்த 81 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். வாகனத்தில் பயணித்த மற்றுமொரு இருவர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது குறித்த விசாரணைகளுக்காக பின்ச் அவென்யூவில் உள்ள நெடுஞ்சாலையின் அனைத்து வடக்கு நோக்கிய பாதைகளையும் பொலிஸார் மூடியிருந்தனர்.
இவ்விபத்து தொடர்பான விபரங்கள் அல்லது டேஷ்கேம் காட்சிகள் (dashcam footage) ஏதேனும் வைத்திருப்போர், 1-888-310-1122 என்ற இலக்கத்தின் ஊடாக விசாரணை அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.