கோவை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் வழங்கிய துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில், தனது ஆதங்கத்தை வெளிப்படையாகக் கொட்டித் தீர்த்துள்ள வீடியோ தற்போது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஆதரவு நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு, தனக்கு மட்டும் பதவி வழங்குவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், வீரமணி போன்ற மூத்த தலைவர்களுக்கும், விஜயபாஸ்கர் போன்றவர்களுக்கும் பதவி வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். “என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டுப் பதவியை ஏற்க நான் தயாராக இல்லை” என்று அவர் ஆவேசமாகக் கூறினார். ஏற்கனவே தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த இவருக்கு, தற்போது கட்சிப் பதவியிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெக-வில் இணையவிருக்கும் சூழலில், எஸ்.பி.வேலுமணியின் இந்த அதிரடி முடிவு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், வெளியேற்றம் குறித்த அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
#SPVelumani #ADMK #EPS #TvkGovernment #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #AdmkCrisis #Politics2026 #PoliticalDrama #TamilNaduPolitics #InternalConflict #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash