செங்கல்பட்டு:
திருப்போரூர் அருகே சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கி வைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முந்தைய தி.மு.க. ஆட்சியில் நிலவிய ஊழல் கலாச்சாரம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது அமைதி காத்ததற்கான காரணங்களையும், தற்போது வெளிப்படையாகப் பேசுவதற்கான காரணத்தையும் விளக்கினார்.
“முதல்வர் விஜய் சின்னக் குழந்தை அல்ல; கலை உலகில் சாதித்து விட்டு வந்தவர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடந்தபோது பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்திக்க இரவோடு இரவாகச் சென்றவர் அவர் ஒருவர்தான்” என்று விஜய்யின் மக்கள் சேவையைப் பாராட்டிய வைகோ, கடந்த கால தி.மு.க. ஆட்சியின் கமிஷன், கரப்ஷன், கட்டிங் ஆகியவற்றை விஜய் ஒழித்துவிட்டதாகத் தெரிவித்தார். தான் கலைஞரின் போராட்டங்களில் பங்கேற்ற வரலாற்றை நினைவு கூர்ந்த வைகோ, புலிகளுடன் கூட்டு சேர்ந்து கருணாநிதியைக் கொல்ல முயன்றேன் எனத் தவறான குற்றச்சாட்டு சுமத்தி வெளியேற்றப்பட்டதாகக் கூறி வேதனை தெரிவித்தார். கூட்டணி தர்மத்தை மீறிப் பேசவில்லை என்றும், இப்போது தர்மம் மாறியதால் உண்மைகளைத் துணிச்சலுடன் பேசுவதாகவும் அவர் கூறினார்.
#Vaiko #MDMK #DMK #TvkGovernment #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #CorruptionAllegation #Politics2026 #PoliticalDrama #TamilNaduPolitics #Vijay #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash