போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக கட்சிகளை இதற்கு சம்பந்தப்படுத்தக்கூடாது. தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த பலரும் கடந்த காலங்களில் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலை இருந்துவந்தது. அதனால் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதுபோன்று கடந்த காலங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் அப்போது இருந்த அரசாங்கங்கள் எடுத்துள்ளன. அதனால் போதைப்பொருளுக்கு எதிராக கட்சி போதமின்றி அனைவரும் இணைந்து செயற்பட்டிருக்கின்றனர்.

என்றாலும் நாட்டு மக்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். விவசாயிகள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கும்நிலையில் ஜனாதிபதி அந்த போராட்டங்களை மறைக்கும்வகையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேல் எழுப்பி இருக்கிறார். அதேநேரம் போதைப்பொருள் கைப்பற்றிய தொகையைும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2019ல் நாங்கள் கைப்பற்றிய போதைப்பொருள் தொகையை விட குறைவாகவே இந்த அரசாங்கம் இரண்டு வருட காலத்தில் கைப்பற்றி இருக்கிறது. அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை சத்தம் போட்டுக்கொண்டு செய்கிறது. ஆனால் நாங்கள் எந்த பிரசாரமும் மேற்கொள்ளாமல் செய்துவந்தோம்.

அதேநேரம் கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட கீத்நொயார், லசன்த் விக்ரமதுங்க பாேன்ற பட்டியை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அதேநேரம் 88, 89 காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர், ரூபவாஹினி கூட்டுத்தாபளத்தின் செய்தி தயாரிப்பாளர் கொலை செய்யப்பட்டார். இவ்வாறு பலர் இந்த காலப்பகுதியில் கொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதேபோன்று எமது கட்சி அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர் தவறு செய்திருந்தால், அவருக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால் பேலியகொடை நகரசபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் மகன் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யபட்டிருந்தார்.

அவரது கணவரும் பாேதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோன்று இவ்வாறு தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனால் இந்த விடயத்தில் கட்சிகளின்பால் கை நீட்ட வேண்டாம் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.

அதேபோன்று இந்த காலப்பகுதியில் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட எண்ணிக்கையை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அதனையும் விட அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் 2014 காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அதனால் ஜனாதிபதி ஒரு புதிய விடயம்போல் இதனை தெரிவிக்க முயற்சிக்கிறார். அத்துடன் இந்த நாட்டில் துப்பாக்கியால் கொலை செய்வதை பிரபாகரனுக்கு கற்பித்துக்கொடுத்ததும் உங்களது கட்சி தலைவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே போதைப்பொருள் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுபோன்று, போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களை புனர்வாழ்வளிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது