திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு, மாநிலத்தையே உலுக்கியுள்ளது. விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்ததைக் கண்டு பெரும் வேதனையடைந்துள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு சோதனைகளைத் தவெக அரசு முறையாக மேற்கொள்ளாததே இத்தகைய கொடும் விபத்துகளுக்குக் காரணம் என்று விமர்சித்துள்ளார்.
“வளர்ச்சி என்ற பெயரில் தொழிற்சாலைகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் அரசு, தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சூழலியல் நலனை ஒருநாளும் கண்காணிப்பதில்லை\” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், விபத்துக்கான பின்னணியைக் கண்டறிந்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தொழிலாளர் பாதுகாப்பு விவகாரத்தில் அரசு இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்ற சீமானின் இந்த கோரிக்கை, தற்போது அரசியல் களத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
#Seeman #NTK #Thiruvallur #AmmoniaGasLeak #IndustrialSafety #TvkGovernment #Vijay #ThalapathyVijay #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #WorkersRights #JusticeForWorkers #TamilNaduNews #TamilNaduPolitics #PoliticalAttack #Governance #TamilPolitics #Tragedy #IndustrialAccident #NewsUpdate