முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி காலமானார்!

சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளார்.

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த இவர், ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த இவர், ஊடகத் துறை மீது கொண்ட ஆர்வத்தால் பகுதிநேர ஊடகவியலாளராகத் தனது பணியைத் தொடர்ந்தார். ‘வீரகேசரி’ நாளிதழ் மற்றும் ‘தமிழ்நெட்’ இணையத்தளம் ஆகியவற்றில் பணியாற்றிய அவர், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் விளங்கினார்.

மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி), நாட்டுப்பற்றாளர் நா. சிவராம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், சண் தவராசா, வேதநாயகம், உதயகுமார் உள்ளிட்ட பல முக்கிய ஊடகவியலாளர்களுடன் இணைந்து இவர் களப்பணியாற்றியுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் பரிந்துரைக்கப்பட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். இத்தேர்தலில் 44,457 விருப்பு வாக்குகளைப் பெற்று, வடகிழக்கிலிருந்து தெரிவான கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

அரசியல் ரீதியாகப் பல அச்சுறுத்தல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்ட இவர், மட்டக்களப்பிற்குச் செல்வதில் பலத்த முட்டுக்கட்டைகளைச் சந்தித்தார். இதன் உச்சக்கட்டமாக, 2006 ஆம் ஆண்டு யூலை மாதம் மட்டக்களப்பு, பூம்புகாரில் அமைந்திருந்த இவரது வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் ஆர்.பி.ஜி (RPG) எறிகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது.

இக்காலப்பகுதியில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் நோக்கில், ‘அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூலையும் 2008 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்டார். எனினும், தொடர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது குடும்பத்துடன் பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்தார். லண்டனில் வாழ்ந்த காலத்தில், 2010 மே மாதத்தில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவாகி, பின்னர் அதிலிருந்து விலகியிருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் இலங்கை திரும்பிய ஜெயானந்தமூர்த்தி, வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் இணைந்து சில ஆண்டுகள் செயற்பட்டார். பின்னர் அதிலிருந்தும் விலகிய அவர், இறுதியாக 2024 ஆம் ஆண்டு மே மாதம் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கல்குடா தொகுதி இணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2024 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் நவம்பர் 14 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரப் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,