செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 353 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜுலை மாத முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணி மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிடவுள்ளனர்.
இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 353 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவற்றில் 334 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் ஜுலை மாத முற்பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைச் சென்று பார்வையிடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
அதேவேளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இவ்வாரம் அல்லது எதிர்வரும் வாரம் செம்மணி மனிதப்புதைகுழிவைப் பார்வையிடச் செல்வார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.