நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன் – சேகுவேரா; இன்று பிறந்தநாள்!

சேகுவேரா அல்லது சே என்று அழைக்கப்படும் இவர் ஜூன் 14 1928 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவிலுள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் எர்னஸ்டோ குவேரா லின்ஞ் மற்றும் சிசிலியா தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்டபெயர் “ஏர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா”. மகன் மீது மிகுந்த அன்பு கொண்ட தாய்⸴ தந்தையர் தங்கள் பெயர்களை இணைத்து குவேரா டி லா செர்னா என பெயர் சூட்டினர். அவரை செல்லமாக வீட்டில் டேட்டி என்று அழைத்தனர்.

இவர் ஓர் இடதுசாரி குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இரண்டு வயதாக இருக்கும் போது ஆஸ்துமா நோய் கண்டறியப்பட்டது. வாழ்நாள் முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இவரைப் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலிருந்தபடியே பாடங்களை படித்தார்.

புரட்சி என்றால் உடனே நினைவிற்கு வரும் பெயர்களில் முதன்மையானது சேகுவேராவின் பெயர் தான்.

உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும்⸴ தியாகத்திற்கும் உதாரணமாகத் திகழ்கின்றவர் சேகுவேரா. கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன், புரட்சியாளர்⸴ மருத்துவர், அரசியல்வாதி⸴ இலக்கியவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட போராளி.

“நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன்” என்பதே இவரின் வைரவரிகளாகும். “நான் ஒரு கொரில்லா போராளி” அப்படி அழைப்பதையே விரும்புகின்றேன் என்று கூறிய புரட்சியாளர்.

சேகுவேரா மருத்துவராக இருந்து ஒரு போராளியாக உருவெடுத்து புகழ்பெற்ற கம்யூனிசப் புரட்சியாளர். ஏகாதிபத்தியத்தின் எதிரி. அடக்கு முறையை அடக்கப் பிறந்தவரென்று அறியப்படும் சேகுவேரா புரட்சிக்கு புகழ்பெற்ற தலை சிறந்த போராளி. இவரே உண்மையான இளைஞர்களின் சக்தி என்றால் அது மிகையாகாது.

அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற அவர், 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, தொழுநோய்க்கு தன்னால் மருத்துவம் கண்டுபிடிக்க முடியும் என எண்ணி மோட்டார் சைக்கிளில் தென்னமெரிக்கா, அமேசன் முழுவதும் சுற்றித் திரிந்தார்.

மருத்துவப் படிப்பு⸴ புத்தகங்கள்⸴ தொடர்ச்சியான தேர்வு என்பவற்றால் சோர்வடைந்திருந்தார் சேகுவேரா. அதிலிருந்து மீள அவர் தேர்ந்தெடுத்தது தான் பயணங்கள். அவரோடு அவரது நண்பரும் சேர்ந்து கொண்டார்.

1952 ஆம் ஆண்டு ஜனவரியில் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். 8 மாதங்கள் ஐந்து நாடுகளைச் சுற்றிவர வேண்டுமென்பது அவர்களது திட்டமாக இருந்தது. மோட்டார் சைக்கிளில் பயணிக்க தீர்மானித்தனர்.

லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையும் சுற்றிவர வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. ஆண்டிஸ் மலைத்தொடரைக் கடந்து சென்று சேர வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் அப்பயணம் எளிதாக அமையவில்லை.

ஆபத்தான பகுதிகளில் அவர்கள் பயணிக்க வேண்டியிருந்தது. தங்கள் பயணத்தின் மேல் உறுதியாக இருந்த இருவரும் தொடர்ந்து பயணித்தனர். அந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் பேரு நாட்டினை சென்றடைந்தனர்.

அங்கு பூர்வகுடிகள் படும் துன்பங்களை நேரில் கண்டனர். சான் பாபிலோனா நகருக்குச் சென்ற அவர் அங்கு தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.

அங்கிருந்து வெனிசூலாவின் காரகாசாவுக்கு நீண்ட பேருந்து பயணம் மேற்கொண்டு அங்கிருந்து சரக்கு விமானம் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநில மியாமி நகருக்குச் சென்று அங்கிருந்து 1952 செப்டம்பரில் தனது பயணத்தை முடித்து ஆர்ஜெண்டீனாவுக்கு மீண்டும் திரும்பினார்.

சேகுவேரா கவுதமாலாவில் இருந்த போது கியூப நண்பர்கள் வழியாக பிடல் காஸ்ட்ரோ பற்றி அறிந்திருந்தார். ஆட்சியில் இருந்த பாடிஸ்டா அரசுக்கு எதிராகப் பிடல்காஸ்ட்ரோ போராடிக் கொண்டிருந்தார்.

நண்பர் ஒருவரின் மூலம் சேகுவராவிற்கு காஸ்ட்ரோவை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 1953ஆம் ஆண்டு கியூபாவில் நடந்த புரட்சிக்கான முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. அரசினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோ மெக்சிக்கோ வந்திருந்தார். அந்த சமயத்தில் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார் சேகுவேரா.

இந்த சமயமே உலகை உலுக்க போகும் புரட்சிக்கான புள்ளி வைக்கப்பட்டது. கியூபப் புரட்சிக்கான திட்டம் தீட்டப்பட்டது. ஆட்கள் திரட்டப்பட்டனர். ஆயுதங்களும் திரட்டப்பட்டன. புரட்சியாளர்களுக்கு கொரில்லா பயிற்சி அளிக்கப்பட்டது.

பாடிஸ்டா ராணுவத்தை முடக்க நீர் வழிப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு கிரான்மா எனும் கள்ளத் தோணியில் சேகுவேரா காஸ்ட்ரோ உள்ளிட்ட 82 வீரர்கள் 1956ஆம் ஆண்டு கியூபாவிற்கு புறப்பட்டனர்.

1957 ஆம் ஆண்டு ராணுவ தளபதி கொல்லப்பட்டார். இதுவே புரட்சியாளர்களின் முதல் வெற்றியாகும். 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கியூபா தலைநகரான ஹவானா புரட்சிப்படை வசம் வந்தது. காஸ்ட்ரோவிடம் கியூப ஆட்சி வந்தது.

அதன் பின் பொலிவியா நாட்டின் விடுதலைக்கு போராட சென்ற சேகுவேரா அங்கு 1967 ஒக்டோபர் 9 திகதி பொலிவிய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டு அக்டோபர் 18ஆம் திகதியன்று கியூபாவின் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க சேகுவேரா கொல்லப்பட்ட செய்தியை கியூப மக்களுக்கு அறிவித்தார் பிடல் காஸ்ட்ரோ.

ஒட்டுமொத்த கியூபாவும் சோகத்தில் மூழ்கியது. சேகுவேராவின் உடல் பொலிவியாவிலுள்ள லவே கிறேன்டாவில் புதைக்கப்பட்டது. கியூபாவின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க 1997-ஆம் ஆண்டு மீண்டும் தோண்டப்பட்டு சேகுவேராவின் எலும்புக்கூடுகள் ஒப்படைக்கப்பட்டன.

தான் கொண்ட கொள்கைகளை எந்த சமரசமும் இன்றி நேசித்தவர் சேகுவேரா. ஆதனால்தான் பிறப்பினால் ஓர் அர்ஜெண்டினரான சேகுவேரா க்யூபாவிற்காகவும்⸴ காங்கோவிற்காகவும்⸴ பொலிவியவிற்காகவும் போராட முடிந்தது.

சேகுவேராவின் புரட்சி வரலாற்றில் நிலைத்திருப்பதின் காரணம் அது அன்பின் உன்னதத்தால் வழிநடத்தப்பட்டது என்றால் அதுமிகையாகாது.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109