யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நிதிக்குழு கூட்டம் நேற்றையதினம்(10.06.2026) சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, சபையின் செயலாளர் எவ்வித முன்னறிவித்தலுமின்றி திடீரென வெளியேறியுள்ளார்.
வெளியே சென்ற செயலாளர் நீண்ட நேரமாகியும் மீண்டும் கூட்டத்திற்குச் சமூகமளிக்காததால், கூட்டத்தில் பெரும் அமைதியின்மையும் குழப்பமான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த சபை உறுப்பினர்கள் செயலாளரைத் தேடிச் சென்றபோது, அவர் பொறுப்பற்ற முறையில் தனது சொந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
செயலாளரின் இந்த அலட்சியப் போக்கினால் வேதனையடைந்த சபை உறுப்பினர்கள், இச்சம்பவம் குறித்து உள்ளூராட்சி ஆணையாளருக்குப் முறைப்பாடொன்றை அனுப்பியுள்ளனர்.