தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கென மனநல மருத்துவ நிபுணர்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவொன்றை நீதிமன்றம் நியமித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் பாசந்த அமரசேன பிறப்பித்துள்ள இந்த உத்தரவின்படி, இந்த மருத்துவப் பரிசோதனையானது கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் (களுபோவில மருத்துவமனை) நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான விரிவான மருத்துவ அறிக்கையை அடுத்த வழக்கு விசாரணைத் தேதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக ‘அடதெரண’ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.