அன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற தரப்பினரே இன்று சலேவின் தடுப்புக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர் – தினன தகுன

யங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற தரப்பினரே இன்று சலேவின் தடுப்புக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை நீண்டகாலம் தடுத்து வைத்து, அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அவமதிப்பான மற்றும் அநாகரிகமான நடத்தைகளை வன்மையாக கண்டிப்பதாக தினன தகுன கூட்டிணைவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தினன தகுன கூட்டிணைவு நேற்று (8) திங்கட்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை தடுப்புக் காவலில் வைத்து அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அவமதிப்பான நடத்தைகளை கண்டிப்பது மாத்திரமின்றி, இலங்கை அரசியலில் நிலவும் இரட்டை நிலைப்பாடு குறித்தும் சமூகத்துக்கு எச்சரிக்கை விடுக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறோம்.

சுரேஷ் சலேவுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, அவருக்கு இத்தகைய அவமதிப்பை ஏற்படுத்துவதன் மூலம், அவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் இருந்த சூத்திரதாரியும் ஒரே தரப்பினர் தான் என குற்றப்புலனாய்வு திணைக்களம் பலவந்தமாக வாக்குமூலத்தைப் பெற முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த ஒட்டுமொத்த சம்பவத்துக்குப் பின்னால் உள்ள, இலங்கை அரசியலின் மிகமோசமான முரண்பாடு மற்றும் போலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இரட்டை வேடத்தை சுட்டிக்காட்ட வேண்டியது மிக முக்கியமானதாகும். இந்தச் சம்பவத்தை கண்டிப்பதோடு, அரசியல் ரீதியாக இக்கருத்தை வெளிப்படுத்துவது மிக அவசியமான ஒன்றாக நாம் கருதுகிறோம்.

இலங்கையில் உள்ள தாராளவாத மற்றும் முற்போக்கு மக்கள், 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்துக்கு எதிராக நான்கு தசாப்தங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இந்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளன.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் அபாயம் காரணமாக, இந்தச் சட்டத்தை ரத்து செய்வது நாட்டின் பொருளாதாரத்துக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது.இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிராக வலுவான அரசொன்று தேவை என்று நம்பிய இந்நாட்டு சிங்கள பௌத்த அரசியல் சக்திகள், இந்த பின்தங்கிய சட்டத்தை நாட்டில் இருந்து ஒழிக்க எவ்வித விருப்பமும் காட்டவில்லை என்பதை நாம் இங்கு நினைவூட்டுகிறோம்.

அன்று இச்சட்டத்தைப் பாதுகாக்க ஆதரவு தெரிவித்த அரசியல் சக்திகளே இன்று அதே சட்டத்தின் இரையாக்கப்பட்டுள்ளனர். தற்போது தடுப்புக் காவலில் இருக்கும் மேஜர் ஜெனரல் சலேவுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக, அன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற தரப்பினரே இன்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதில் மிகவும் வேடிக்கையான மற்றும் கவலையளிக்கும் விடயம் யாதெனில், அன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்வதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வந்த பின்னர், அதே அடக்குமுறை சட்டத்தைப் பயன்படுத்தி மேஜர் ஜெனரல் சலேயை வேட்டையாட முனைவதுதான்.பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்பது சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும், மனிதத்தன்மையற்ற மற்றும் கொடூரமான அடக்குமுறை சட்டமாகும்.

ஒரு சந்தேக நபரை நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைத்திருப்பது, சித்திரவதைகளுக்கும் அவமதிப்பான நடத்தைகளுக்கும் உள்ளாவதற்கான பின்னணியை உருவாக்குவதே எமது கருத்தாகும். இவ்வாறான நீண்டகால தடுப்புக் காவல் மூலம் மேற்கொள்ளப்படும் உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளின் இறுதி முடிவு, கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி, சந்தேக நபரிடமிருந்து பலவந்தமான வாக்குமூலங்களை பொலிஸார் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாகும்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி தொடர்பிலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் கையாள்வது இந்த தந்திரோபாயத்தையே என்பது தெளிவாகிறது.இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நாடு பாதுகாக்கப்படுகிறது என்று நினைப்பது ஒரு மாயையாகும். இத்தகைய அநீதியான சட்டங்கள் மூலம் குடிமக்களின் சுதந்திரம் மற்றும் சமத்துவத்துக்கான உரிமையைப் பறித்து, குடிமகனுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உள்ள நம்பிக்கையைச் சிதைக்கின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்த அரசின் நியாயத்தன்மையை சீரழிக்கின்றன.

தர்க்க ரீதியான பொதுக் கொள்கை வகுப்பதில் நமது நாட்டின் அரசியலில் உள்ள வெற்றிடமும், கௌரவமற்ற தன்மையும் இதிலிருந்து நன்கு தெளிவாகிறது.எனவே, தினன தகுன கூட்டிணைவாகிய நாம், தற்போதைய அரசாங்கத்திடம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு கோருகிறோம்.

தற்போதைய அரசாங்கம் இந்தச் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் அதேபோன்ற அடக்குமுறை சட்டங்களைக் கொண்டுவர முயற்சிப்பது தெரிகிறது. அது ஒருபோதும் தீர்வாகாது.இலங்கை இத்தகைய அடக்குமுறை சட்ட ஆட்சி முறைகளின் உதவியின்றி, நாட்டை நிர்வகிக்கவும், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கவும் பழகிக்கொள்ள வேண்டும்.

பழைய அடக்குமுறை யதார்த்தத்துக்குப் பதிலாக, புதிய தர்க்க ரீதியான சிந்தனையை முன்னிலைப்படுத்திய 21ஆம் நூற்றாண்டின் நற்பரிபாலனக் கலையே இருக்கவேண்டும் என்று எமது கூட்டிணைவு நம்புகிறது. நாட்டின் அனைத்து அரசியல் சக்திகளும் இந்த யதார்த்தத்தை ஏற்றுச் செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GL

சிறையில் உள்ள மதத் தலைவர்களின் ஆடை குறித்து அரசு ஏமாற்று வேலை செய்கிறது – ஜீ.எல். பீரிஸ்

October 14, 2026

சிறைச்சாலையில் உள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்களை வெளியிலும் நீதிமன்றங்களுக்கும் அழைத்துச் செல்லும்போது அவர்கள் அணியவேண்டிய உடைகள் குறித்து

basil

பசிலை கைதுசெய்யுங்கள் – சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுங்கள் -நீதவான் உத்தரவு

October 14, 2026

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைதுசெய்து தன்முன்னாள் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்

srisena

அரசமைப்பினை பின்பற்றியே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கினேன்- மைத்திரி

October 14, 2026

அரசமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையிலேயே பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

nihal abeyasinga

புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஜனவரியில்

October 14, 2026

அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் 2027 ஜனவரியில் ஆரம்பமாகலாம் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

anojan

அனோஜனின் மரணதண்டனை இரத்து

October 14, 2026

இலங்கையரான அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்

IMG_9425

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

October 14, 2026

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கையர்கள் தமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது அவதானத்துடன்

IMG_9424

ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

October 14, 2026

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும்

nsm

மீண்டும் விளக்கமறியலில் நாமல்!

October 14, 2026

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற

wor

உலக வங்கிப் பிரதிநிதிகள் – ஜனாதிபதியின் செயலாளர் சந்திப்பு!

October 14, 2026

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர்

th

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக திக்கம் வடிசாலையை மீளச் செயற்படுத்தத் திட்டம்!

October 14, 2026

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக