நாட்டின் நலன் கருதி செயற்படத்தக்க ஏதேனும் பொறுப்புகள் வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக ஷவேந்திர சில்வா மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அவரிடம் வினவப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
‘எனக்கு செயற்பாட்டு அரசியலுக்குள் வர எந்த எண்ணமும் இல்லை. எந்த அரசியல் மேடையிலும் ஏறிச் செயல்படத் திட்டமில்லை. ஆனால் நாட்டுக்காக ஏதேனும் பொறுப்பு வழங்கப்பட்டால், அதை நிறைவேற்ற நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
என்னுடன் போராடிய மற்றும் போரில் காயமடைந்து மாற்றுத்திறனாளிகளான முன்னாள் படைவீரர்களின் நலனே எனது முதன்மை நோக்கமாகும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘நாம் போராடியது எந்த இனத்திற்கும் எதிராக அல்ல பயங்கரவாதத்திற்கே எதிராக இருப்பினும் இன்று வரை சில மேற்கத்திய நாடுகள் எங்களை அநியாயமான முறையில் நடத்துகின்றன.
எங்கள் போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல பயங்கரவாதத்துக்கு எதிரானதுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.