சங்கீதனை விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு – கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
சொல்லிசை பாடகர் சங்கீதன் 02.06.2026 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(06)
கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சியில் குறித்த் இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்த்தின்
போது விடுதலை செய்ய விடுதலை செய் சங்கீதனை விடுதலை செய், சட்டத்தின் ஆட்சி சமமாக இருக்கட்டும்! சட்டத்தை அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தாதே, பாட உரிமை எங்கள் உரிமை! பறிக்காதே பறிக்காதே, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்காதே, அடக்குமுறைக்கு நிறுத்து! கலைஞர்களின்
குரல்வளையை நெரிக்காதே, அநீதியான சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே
நீக்கு, சொல்லிசைப் பாடகன் குற்றவாளியா? கிளிநொச்சிக் கலைஞனை உடனே விடுதலை செய், பாடினால் சிறையா? பேசினால் கைதா? ஏதேச்சதிகாரக் கைதுகளை, உடனே நிறுத்து, கலைஞர்களின் படைப்புரிமை சட்டப்பூர்வமானது! சட்டம்
வழங்கிய உரிமையை அதிகாரத்தால் பறிக்காதே, சர்வதேச மனித உரிமை பிரகடனங்களை மதிக்கக்
கற்றுக்கொள்! கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) உடனே நீக்கு
போன்ற கோசங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். இந்த
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்