கிளிநொச்சி-உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டுமரக்கன்றுகளை நடும் விசேட நிகழ்வு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகளை நடும் விசேட நிகழ்வு இன்று (05.06.2026) வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது. இந்த மாபெரும் மர நடுகைத் திட்டத்தை வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் உமையாள்புரம் கிராம மக்கள் இணைந்து இந்தச் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்ததுடன், ‘நிலா இம்பக்ட்’ நிறுவனத்தினர் இதற்கு அனுசரணை வழங்கியிருந்தனர்.
‘மரங்களை அழிப்பது மனிதன் தன் சொந்தக் கைகளால் தன் சுவாசப் பையைச் சுருக்குவதற்குச் சமம்’ என்ற ஆழமான கருப்பொருளுடனும், ‘ஒரு மரம் ஆயிரம் நன்மைகள்’, ‘இன்று ஒரு மரம் நடுவோம், நாளை ஒரு உலகம் காப்போம்’ போன்ற விழிப்புணர்வுச் சிந்தனைகளை மையப்படுத்தியும் இந்த மர நடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், ‘இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் ‘இயற்கையிலிருந்து உத்வேகம் பெறுவோம்: பருவநிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக’ என்பதாகும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பசுமைச் சூழலை உருவாக்கல் என்பதே இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது.
நாம் இயற்கை வளங்களை அழிப்பதாலேயே இன்று மிகப் பெரிய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. எதிர்வுகூற முடியாத காலநிலைச் சூழலுக்குள் நாம் அனைவரும் சிக்கியுள்ளோம். எனவே, இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாப்பதும், பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவதும் எதிர்கால சந்ததியினருக்கு இந்தப் பூமியை வளமுள்ளதாக ஒப்படைப்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும், எனத் தெரிவித்தார்
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அவர்கள், ‘எமது மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் காடழிப்பு என்பன தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. இவை எமது சூழலை அழிக்கும் பாரதூரமான செயற்பாடுகளாகும். எமது முன்னோர்கள் இந்த மண்ணைக் காக்கத் தமது உயிரையே அர்ப்பணித்தார்கள்; இந்த வளங்களைப் பாதுகாப்பதற்கு அரும்பாடுபட்டார்கள். நாம் இப்போது இந்த இயற்கை வளங்களைப் பாதுகாக்காதுவிட்டால், எமது எதிர்கால சந்ததிக்கு எதுவுமே மிஞ்சாது, எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் ஓர் அங்கமாகப் பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஏ-9 பிரதான வீதியின் கரையோரங்களில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. மேலும், பரந்தன் நகரப் பகுதியில் சுற்றாடலைத் துப்புரவு செய்யும் மாபெரும் சிரமதான நடவடிக்கையும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த விசேட நிகழ்வில் கௌரவ ஆளுநருடன் இணைந்து, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், கரைச்சி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அ.வேளமாலிகிதன், கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவனருள்ராஜா, கிளிநொச்சி 553 பிரிகேட்டின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் முதுநாயக, ‘நிலா இம்பக்ட்’ நிறுவனத்தின் தலைவர் ஜெ.சிறிசங்கர் ஆகியோரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் உன்னத நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்றிட்டத்தில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் உமையாள்புரம் கிராம மக்கள் எனப் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு