நேற்று தீ விபத்து ஏற்பட்ட அங்குருவாதொட, படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேக நபர் இன்று ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 12 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
முதியோர் இல்லத்தில் இருந்த 71 அந்தேவாசசிகளில் (வசிப்பாளர்களில்), ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 51 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அங்குருவாதொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.