இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நஜ்மி ஹுசைன் முன்னிலையில் நேற்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்தது. கடந்த தவணையில் விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டதாக கூறி நீண்ட அவகாசம் கோரிய பொலிஸார், நேற்று அறிக்கை இன்னும் அனுப்பப்படவில்லை என்று தெரிவித்தனர்.
சிறுமி சார்பு வழக்கறிஞர் எஸ்.கே.புரந்தரன், பொலிஸார் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாகவும், வழக்கை காலந்தாழ்த்துவதாகவும் கண்டித்தார்.
நீதவான் பொலிஸாரின் போக்கை கடுமையாக கண்டித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகம் குறுகிய காலத்தில் — அல்லது அடுத்த தவணையில் — இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற வழக்குக் குறிப்பேடுகளை வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க நீதிமன்றம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.