கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எமது அன்புப் பாலகன் பாலச்சந்திரனின் முகம் என் நினைவலைகளில் அழியாச் சித்திரமாய் வந்து போகிறது – சிறீதரன் எம்.பி

எத்தனையோ சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலும், கல்வியே எமது சமூகத்தின் ஆகச்சிறந்த ஆயுதம் என்பதனை நிரூபித்து, விடிவை நோக்கிய எமது பயணத்திற்கு புதிய நம்பிக்கையை நாம் கட்டமைக்க வேண்டும்” என கிளி/ கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற புலமைப் பரிசில் பாராட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிவஞானம் சிறீதரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
​”ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை படைத்து, இந்த மண்ணிற்கும் நமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள உங்கள் அனைவரையும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளால் ஆசீர்வதிக்கின்றேன். இந்த மேடையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதையும் தாண்டி, இந்த வித்துக்கள் உருவான இதே பாடசாலையின் மேனாள் அதிபர் என்ற பாரிய பெருமிதத்தோடும் உரிமையோடுமே நான் உங்களோடு பேசுகின்றேன்.
இந்த வகுப்பறைகளில் எல்லோரும் விதைத்த அர்ப்பணிப்பும், ஆசிரியர்களின் ஓயாத உழைப்பும் இன்று உங்களின் இந்த அரிய வெற்றியின் மூலம் மாபெரும் அறுவடைப் பெருவிழாவாக மாறியிருக்கின்றது.
​அதேவேளை, இதே நாட்கள், எமது தேசத்தின் வரலாற்றில் ஆறாத வடுக்களைச் சுமந்த முள்ளிவாய்க்கால் நினைவு வார நாட்களாகும். இந்த உயரிய மேடையில் நின்று பேசும் போது, இதே பாடசாலையில் கல்வி கற்று, படுபயங்கரமான முறையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எமது அன்புப் பாலகன் பாலச்சந்திரனின் முகம் என் நினைவலைகளில் அழியாச் சித்திரமாய் வந்து போகிறது.
​உங்களைப் போலவே துள்ளிக் குதித்து விளையாடி, கல்வி கற்று, சாதனைகள் பல படைக்க வேண்டிய ஒரு உன்னதமான தமிழ் வித்து, மிகக் கொடூரமாக எமது மண்ணில் கருக வைக்கப்பட்டது.
இந்த முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில், நாம் பாலச்சந்திரன் உள்ளிட்ட எமது பிஞ்சுப் பாலகர்களையும், மாண்ட ஒட்டுமொத்த உறவுகளையும் நெஞ்சார நினைவுகூருகின்றோம்.
​அவர்களின் இழப்பிற்கு நாம் செலுத்தக்கூடிய ஆகச்சிறந்த அஞ்சலி என்னவென்றால்—அநீதிகளுக்கு முன்னால் ஒருபோதும் மண்டியிடாமல், கல்வி எனும் பேராயுதத்தை ஏந்தி, இந்த மண்ணின் உரிமைகளுக்காகவும் எமது சமூகத்தின் எழுச்சிக்காகவும் எமது இளைய தலைமுறையை அறிவுள்ள, ஆற்றல்மிக்க சமூகமாக கட்டியெழுப்புவது மட்டுமேயாகும்” எனத் தெரிவித்தார்
4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,