தமிழர்களின் தேசிய நலன்கள் மற்றும் அபிலாஷைகளை வலியுறுத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்வோம்!

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் ஊர்திப் பயணம், முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரல், உள்ளூராட்சி சபைகளில் அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில மூன்று தசாப்த காலப் போரில் உயிர்நீத்த உறவுகள் நினைவுகூரப்பட்டனர்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட மே 18 ஆம் திகதியான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் போரில் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாகப் பலரும் கலந்துகொண்டு பொதுச்சுடர் ஏற்றி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இதுகுறித்துக் கருத்துரைத்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் அருட்பணி சின்னதுரை லியோ ஆம்ஸ்ட்ரோங், நினைவேந்தல் நிகழ்வில் கட்சி, இனம், மதம், பிரதேசம் போன்ற குறுகிய மனப்பான்மைகளைக் கடந்து, ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து இத்துயர நாளை நினைவுகூர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

அத்தோடு இந்நிகழ்வில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துவதுடன், தமிழர்களின் தேசிய நலன்கள் மற்றும் அபிலாஷைகளை வலியுறுத்தும் வகையிலும் இது அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதுமாத்திரமன்றி இந்த ஆண்டும் பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரே குடையில் கீழ் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வெவ்வேறு பாகங்களிலும் அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்களினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பில் வெள்ளவத்தை அலெக்ஸ்சான்ரா வீதியின் முடிவிற்கு எதிர்ப்புறத்தில் உள்ள கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வை மாலை 5மணிக்கு முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் லண்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலும், தமிழகத்திலும் நாளைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களை நடாத்துவதற்கான ஏற்பாடகள் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான