சட்டத்தரணிகளிடம் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியது பொலிஸ் தரப்பு!

கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது, காலி கோட்டைக்கு அருகில் சட்டத்தரணிகள் குழுவினர் நடத்திய அமைதியான போராட்டத்தைக் கலைத்து, பொலிஸார் இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், அப்போதைய காலி பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட மூவர், பாதிக்கப்பட்ட சட்டத்தரணிகளிடம் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, காலி பகுதியைச் சேர்ந்த அஜித் குமார மற்றும் அமர திவாகர லியனகே ஆகிய இரு சட்டத்தரணிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவானது நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த, அப்போதைய காலி பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கே.என்.ஜி. வேதசிங்க, அப்போதைய காலி பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

அங்கு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகள் அனைவரும் மனுதாரர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருவதாகத் தெரிவித்தார்.

மேலும், மனுதாரர்களிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோரும் ஆவணத்தையும் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இந்த மன்னிப்பை மனுதாரர்கள் ஏற்றுக்கொள்வதாக, அவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

இந்த இணக்கப்பாட்டைப் பதிவு செய்த பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதிவாதியான பொலிஸ் அதிகாரிகளிடம் நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன உரையாற்றுகையில்,

“அன்று நடந்த சட்டவிரோதமான செயல் குறித்தே இந்த மனுதாரர்களான சட்டத்தரணிகள் முறையிட்டிருந்தனர். அவர்கள் காலியிலிருந்து இந்த வழக்குக்காக இங்கு வந்துள்ளனர். இந்த வழக்கைத் தீர்த்துக்கொள்வதற்கு அவர்கள் முன்வந்திருப்பதை பாராட்டவேண்டும். இது போன்றதொரு சலுகை அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை” என்றார்.

இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் திகதி பொருளாதார நெருக்கடிக்கு எதிராக காலி கோட்டைக்கு அருகில் சட்டத்தரணிகள் குழுவினர் சுலோக அட்டைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

இதன்போது, அந்த இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள், போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததுடன், போராட்டக்காரர்களின் சுலோக அட்டைகளையும் கிழித்தெறிந்ததாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

பொலிஸாரின் இந்தச் செயல் மூலம் பிரதிவாதிகள் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரியே இந்த சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ac

கோர விபத்தில் இளம் தம்பதியினர் பலி

October 10, 2026

கம்பஹா – கிரிந்திவலை 231 ஆம் இலக்க பேருந்து பாதையில், ஹேனேகம சந்தியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்

Arju

பிரபாகரனால் முடியாததை நீங்கள் செய்கிறீர்கள்; ஷிராந்தியை உள்ளே போட்டதற்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

October 10, 2026

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்‌ஷவைச் சிறையில் அடைத்தமைக்காகத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்; ஆனால், நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். எமது

thaya

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் கறுப்பு ஜூலை கலவரம் தோற்றுவிக்கப்பட்டது!

October 10, 2026

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில்

v

பதுளை விபத்தில் விமானப்படை அதிகாரி உயிரிழப்பு

October 10, 2026

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை விமானப்படையின் பயிற்சிப்

3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.