“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

சென்னை:

அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பதவி ஆசைக்காகக் கட்சியை அடகு வைக்கத் துடிப்பவர்களை அவர் சாடியுள்ளார்.

அவரது அறிக்கையில், “இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்று, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்று வெற்றி பெற்றவர்கள், இன்று பதவி ஆசை முற்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக முன்மொழிந்ததாக இவர்கள் கூறும் கதையே ஒரு முரண்பாடு. அமைச்சர் பதவிக்காக திமுக-விடம் இவர்கள் தான் பேரம் பேசினார்களோ என்ற சந்தேகம் தொண்டர்களுக்கு எழுந்துள்ளது. ஆளுங்கட்சியின் பொம்மலாட்டத்திற்கு இரையாகி, ‘பதவி எனும் தோளில் போடும் துண்டுக்கு ஆசைப்பட்டு, கழகம் எனும் இடுப்பில் கட்டும் வேட்டியைக் கழற்றிவிட்டு நிற்காதீர்கள்’ என அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துள்ள அவர், “எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதும், குதிரை பேரம் செய்வதும் தான் நீங்கள் சொல்லும் மாற்று அரசியலா? மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அரசியல் செய்கிறீர்கள். அதிமுக-வின் சட்டமன்றக் கட்சித் தலைவர் மற்றும் கொறடா குறித்த கடிதத்தைச் சபாநாயகரிடம் வழங்கிய பிறகும், தலைமையைக் கொச்சையாகப் பேசுபவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் நேரில் செல்வது எந்த விதத்தில் நியாயம்? இது நான்காம் தர அரசியல்” எனச் சாடியுள்ளார். இந்த அறிக்கை தவெக மற்றும் அதிமுக-வின் அதிருப்தி குழுவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

#KPMunusami #EPS #ADMK #VijayAsCM #TVK_Politics #BreakingNews #May14 #TamilNaduPolitics #AiadmkCrisis #PoliticalWar #CVShanmugam #SPVelumani #StalinVsVijay #DravidianPolitics #NewGovernmentTN #AssemblyUpdates #PolicyFirst #FortStGeorge #TamilNews #VijayMakkalIyakkam_“`

su

சுரேஷ் சலேயின் ரிட் மனு பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

July 29, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக்கைது செய்து தடுத்து

Parl

ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா முதலீடுகளுக்காக குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

July 29, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளதும், தற்போதைய ஜனாதிபதியின் பயன்பாட்டில் இல்லாததுமான பல ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலாத்துறையின் முதலீட்டுத் திட்டங்களுக்காக நீண்டகாலக்

XHMNWD52XI3N4U6HGGF7TXXYIY

சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஷெர்வுட் பார்க் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

July 28, 2026

சிறுமி ஒருவருக்கு எதிராகப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஷெர்வுட் பார்க் (Sherwood Park) பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது

757979515_893153420517649_5715581353310024185_n

ஒன்டாரியோ வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: 19 பேர் கைது, $97 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

July 28, 2026

ஒன்டாரியோவின் மிகப்பெரிய போதைப்பொருள் புலனாய்வு நடவடிக்கைகளில் ஒன்றை அடுத்து, கனடிய அதிகாரிகள் 19 பேரைக் கைது செய்துள்ளனர். அத்துடன், தெருக்களில்

CANADA PASSPORT

போலி கனடிய பாஸ்போர்ட் இணையதளத்தை நடத்திய யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு: பொலிஸார் தகவல்

July 28, 2026

னடிய அரசாங்கத்துடன் தொடர்புடையது போல் காட்டி, “ஏமாற்றும்” வகையில் கடவுச்சீட்டு (Passport) இணையதளத்தை நடத்தியதாகக் கூறப்படும் யோர்க் பிராந்தியத்தைச் (York

7JFWSDPFKFG4ZDWVNCBNCHIKCY

வோட்டர்லூவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கடை மேலாளர் காயம் – பொலிஸார் தெரிவிப்பு

July 28, 2026

திங்கட்கிழமை இரவோடு இரவாக வோட்டர்லூவில் (Waterloo) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கடை மேலாளர் ஒருவர் காயமடைந்தமை குறித்து வோட்டர்லூ பிராந்திய

POLICE CANADA 111

ஹால்டன் பொலிஸார் தமது வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் முடிவுகளை வெளியிடவுள்ளனர்

July 28, 2026

ஹால்டன் பிராந்திய பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் (Human trafficking) விசாரணை தொடர்பான முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.

5XSONJLBFZCXDNCH5UVBLEETRQ

1.7 மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரட்டிப்பாகியுள்ளன. அதற்கான காரணம் குறித்து காவல்துறை கூறுவது இதோ.

July 28, 2026

கனடாவின் குற்றக் தீவிரக் குறியீடு (Crime severity index) குறைந்துள்ளதாகவும், தீவிரக் குற்றங்களின் எண்ணிக்கை குறைவதே ஒட்டுமொத்த சரிவுக்குக் காரணம்

7

எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை திட்டவட்ட பதில்!

July 28, 2026

சென்னை: விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்ததில் எந்தவிதமான சட்டவிரோதமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை

6

டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க வேண்டாம்! – வைகோ கோரிக்கை!

July 28, 2026

சென்னை: டெல்லியில் நடைபெறவுள்ள தமது புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி