சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற அக்னிப்பரீட்சையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு அமோக வெற்றி பெற்றுள்ளது. அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை தொடங்கிய வாக்கெடுப்பில், உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும் ‘டிவிஷன்’ (Division) முறை பின்பற்றப்பட்டது. அவையின் கதவுகள் மூடப்பட்டு நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். முன்னதாக, திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், தவெக அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக-வின் ஒரு பிரிவினர் அளித்த ஆதரவால் இந்த இமாலய வெற்றி சாத்தியமாகியுள்ளது. தீர்மானம் வெற்றி பெற்றதாகச் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, கோட்டை வளாகத்தில் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு ஐந்தாண்டு காலத்திற்கான தனது பயணத்தை உறுதிப்படத் தொடங்கியுள்ளது.
#ConfidenceVoteVictory #VijayAsCM #TNAssenbly #TVK_Wins #BreakingNews #May13 #TamilNaduPolitics #FloorTestSuccess #ThalapathyVijay #NewGovernmentTN #AssemblyUpdates #VictoryForVijay #144Votes #MajoritProven #FortStGeorge #DemocraticVictory #TamilNews #VijayMakkalIyakkam #TN_Politics #CM_Vijay_Official_“`