இலங்கையில் இளைஞர்கள் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த நாம் தவறிவிட்டோம் – சாணக்கியன்

ந்த நாட்டில் போதுமான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் தான் எமது இளைஞர்,யுவதிகள் கட்டார்,டுபாய் போன்ற நாடுகளில் தொழில் புரிகிறார்கள்.அவர்கள் இந்த நாட்டில் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் ஆகிய நாம் தவறியுள்ளோம்.குறைந்தப்பட்சம் அவர்களின் பாதுகாப்பையேனும் அங்கு உறுதிப்படுத்த வேண்டும்.வெளிநாடுகளுக்கு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, சட்ட அலகு ஒன்றை ஸ்தாபிப்பது அவசியமாகும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சட்ட அதிகாரத்துடனான அலகு ஒன்றை தாபித்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங் கொடுத்ததன் பின்னர் தான் இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டுச் செல்ல தீர்மானிக்கிறார்கள். அங்கு சென்றதன் பின்னரும் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள்.

ஆடு ஜீவிதம் எனும் திரைப்படம் உள்ளது.இளைஞர், யுவதிகள் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று அங்கு முகங்கொடுக்கும் பிரச்சினைகள் இந்த படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது.இலங்கையிலும் அவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகிறது.

அமெரிக்கா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு வசதி படைத்தவர்களே செல்வார்கள்.ஆனால் எமது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ளோர் இந்த நாட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டதன் பின்னர் தான் தொழிலுக்காக வெளிநாடு செல்வார்கள். அவ்வாறு செல்லும் போது அவர்களின் பெற்றோரின் அஸ்வெசும கொடுப்பனவும் இரத்துச் செய்யும் நிலை காணப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, சட்ட அலகு ஒன்றை ஸ்தாபிப்பது அவசியமாகும்.சுற்றுலா விசாவில் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு செல்ல கூடாது என்ற அடிப்படை கூட ஒருசிலருக்கு தெரியாது. அவர்களின் அறியாமையை ஒருசிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.போலி வெளிநாட்டு முகவர்கள் பற்றி அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.விசா காலம் முடிவடைந்த பின்னரும் பெண்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுகிறார்கள்.பல சித்திரவதைக்கும் உள்ளாகுகிறார்கள்.

இந்த நாட்டில் போதுமான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் தான் எமது இளைஞர்,யுவதிகள் கட்டார்,டுபாய் போன்ற நாடுகளில் தொழில் புரிகிறார்கள்.அவர்கள் இந்த நாட்டில் பொருளாதார மேம்பாட்டுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் ஆகிய நாம் தவறியுள்ளோம்.குறைந்தப்பட்சம் அவர்களின் பாதுகாப்பையேனும் அங்கு உறுதிப்படுத்த வேண்டும்.

வங்குரோத்து நிலையில் இருந்து நாடு விடுபடவில்லை.வெளிநாட்டு வருவாய் ஊடாகவே பொருளாதாரம் தற்போது பாதுகாப்பாகவுள்ளது.வெளிநாடுகளில் வாழும் இலங்கை இளைஞர்கள் சிலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள்.அவர்களின் சடலங்களை கூட நாட்டுக்கு கொண்டுவருவதில் பிரச்சினை காணப்படுகிறது.இந்த பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்