முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு மாநகரசபை உறுப்பினர்கள் கறுத்தப்பட்டியணிந்து சபைக்கு சமூகம் தந்து ஈகச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
மாநகரசபையின் சம்பிரதாயங்களுடன் சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், இந்த மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற வகையில் நேற்றைய நாளில் மாநகரசபை உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து வருகை தருவதுடன் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்துமாறு மாநகரசபை முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது மாநகரசபை உறுப்பினர் அருணால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உயிர்நீர்த்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள் கறுப்புப்பட்டிய அந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தனர். அதனை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் வழமைபோன்று ஆரம்பிக்கப்பட்டன.