சென்னை:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய வேளையில், ஆளுநர் மாளிகையின் முன்பாகத் தவெக நிர்வாகிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூரைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் இருவர், “விஜய்க்கு உடனடியாகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும்” என வலியுறுத்திப் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.
அந்தப் பதாகைகளில், “ஆளுநரே… அரசியல் விளையாட்டு விளையாடாதே! விஜய்க்குப் பதவிப்பிரமாணம் செய்து வை!” என வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆளுநர் மாளிகை அமைந்துள்ள கிண்டி பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், இந்தத் திடீர் முழக்கங்களால் அங்கு பதற்றம் நிலவியது. உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, போராட்டக்காரர்களிடமிருந்த பதாகைகளைப் பறிமுதல் செய்ததோடு, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 108 இடங்களைப் பெற்றும் தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துவதற்குத் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பையே இந்தச் சம்பவம் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
#RajBhavan #ChennaiNews #Vijay #TVK #Protest #BreakingNews #May8 #TamilNaduPolitics #ThalapathyVijay #VijayAsCM #GovernorArlekar #Democracy #MajorityTest #PoliticalCrisis #TNElectionResults2026 #StalinVsVijay #NewGovernmentTN #AssemblyUpdate #TiruppurFans #VijayMakkalIyakkam_“`