திண்டுக்கல்:
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திண்டுக்கல்லில் மூன்று பெண் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக முறைப்படி தனிப்பெரும் கட்சியான தவெக-வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் எனவும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சரண்யா மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண்ணான வளர்மதி உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின்படி அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடங்கினோம்” என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், பாதுகாப்பு கருதி அங்கு குவிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து இரு பெண்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர். தவெக-விற்கு 108 இடங்கள் (விஜய் ராஜினாமா செய்த தொகுதி நீங்கலாக 107 எம்.எல்.ஏ-க்கள்) உள்ள நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் விஜய்யின் பலம் 112-ஆக உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற விஜய் தீவிரமாக முயன்று வரும் சூழலில், தொண்டர்களின் இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
#Dindigul #Vijay #TVK #FastUntoDeath #BreakingNews #May8 #TamilNaduPolitics #ThalapathyVijay #VijayAsCM #PoliceAction #Democracy #MajorityTest #VCK #CPI #CPIM #StalinVsVijay #ElectionResults2026 #NewGovernmentTN #PanaiyurMeeting #VijayMakkalIyakkam_“`