பீல் பிராந்திய பொலிஸாரின் (Peel Regional Police) ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவினர், பிராம்ப்டனைச் சேர்ந்த ஒருவர் மீது ஆள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம், பெண் ஒருவர் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணையாளர்களின் தகவல்படி, 2025 அக்டோபர் முதல் 2026 பிப்ரவரி வரையிலான காலப்பகுதியில், 23 வயதுடைய கபீர் ஜங்ரா (Kabir Jangra) என்பவர், பாதிக்கப்பட்ட பெண்ணைத் தந்திரமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அத்துடன், அந்தப் பெண்ணின் வாழ்க்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அவருக்காக விளம்பரங்களைச் செய்தல், வாடிக்கையாளர்களை ஒழுங்கு செய்தல் மற்றும் அந்தப் பெண்ணைச் சுரண்டுவதன் மூலம் நிதி ரீதியாகப் லாபமடைதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கபீர் ஜங்ரா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:
-
பாலியல் தொழிலுக்காகத் தூண்டுதல் (Procuring)
-
பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்துதல் (Advertising sexual services)
-
பாலியல் சேவைகளுக்காகத் தொடர்பு கொள்ளுதல் (Communicating for sexual services)
-
ஆள் கடத்தல் (Trafficking in persons)
-
ஆள் கடத்தல் மூலம் பலன்களைப் பெறுதல் (Receiving benefits from trafficking in persons)
-
பாலியல் சேவைகள் மூலம் நிதிப் பலன்களைப் பெறுதல்
-
ஒருவரைக் கட்டுப்படுத்துதல் (Exercising control)
அவர் பிணை விசாரணைக்காக பிராம்ப்டனில் உள்ள ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த நபரால் பாதிக்கப்பட்ட வேறு பெண்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிஸார், இது தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்களைத் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.