அவசரகால சட்டத்தை பயன்படுத்தி எவரையும் நாம் கைது செய்யவில்லை- நீதியமைச்சர்

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பற்றி எவரும் குறிப்பிடவில்லை. வழக்கு எண் மற்றும் வழக்கு தினம் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுவானதொரு விடயமாகும். வழக்கின் தீர்ப்பு என்னவென்பது எமக்கு தெரியாது. நீதிமன்றமே அறியும். ஆனால் குறித்த வழக்குடன் தொடர்புடைய நபர் நன்கு அறிவார். அதனால் தான் தற்போது திணறுகிறார்கள்.போலியான விடயங்களை முன்வைக்கிறார்கள் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளையின் கீழான அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தித்வா புயல் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கும், மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் மாத்திரமே அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தை பயன்படுத்தி எவரையும் கைது செய்யவில்லை,எவரையும் அச்சறுத்தவுமில்லை. ஆகவே அவசரகால சட்டத்தை நீட்டிப்பதால் எவ்வித பிரச்சினையும் இல்லை.

வெண்ணெய் பூசும் கத்தியால் நல்லதை செய்யவும் முடியும், தீமையை செய்யவும் முடியும். கத்தியால் பாணுக்கு வெண்ணெய் பூசவும் முடியும், கொலை செய்யவும் முடியும். சட்டமும் அது போன்றதே, கத்தியை கையில் வைத்திருப்பவரின் எண்ணத்துக்கமையவே செயற்பாடும் வெளிப்படும்.

மக்களின் நலனை முன்னிலைப்படுத்திய எண்ணப்பாட்டுடன் தான் அவசரகால சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எவரின் மனித உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் மீறப்படாது.எவரின் உரிமைகளையும் அரசாங்கம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கவில்லை.அதற்கான அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை.

சர்வதேச ஊடக சுதந்திர சுட்டெண் தரப்படுத்தலில் இலங்கை முன்னிலையில் உள்ளது. ஊடக சுதந்திரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சியினர் அரசியல் தான் செய்கிறார்கள். சமூக ஊடகங்கள் வாயிலாக பொய்யுரைக்கிறார்கள். நாட்டு மக்கள் இதனை தற்போது நம்புவதுமில்லை.ஊடக நெறியாக்கத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் ஊடகங்கள் சுதந்திரமாகவே செயற்படுகின்றன.

அரசாங்கம் நீதிமன்ற சுயாதீனத்தில் கை வைப்பதாக எதிர்க்கட்சியினர் தற்போது அரசியல் பிரசாரம் செய்கிறார்கள்.முன்னாள் பிரதம நீதியரசர்களின் வீடுகளுக்கு கல்லெறிந்து மோசமான வகையில் அவர்களை பதவி நீக்கி விட்டு, அவர்களின் வீட்டின் முன்பாக பாற்சோறு சமைத்து சாப்பிட்டவர்கள் தான் இன்று நீதித்துறை சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.

பல மோசடிகள் குறித்து சுயாதீனமாகவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றங்களுக்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வழக்குகள் பற்றி பேசுவதில் என்ன பிரச்சினை உள்ளது. அது நாட்டு மக்களின் தனிப்பட்ட உரிமையாகும். வழக்கு தினத்தை முன்கூட்டியே அறிவிப்பதில் எவ்வித பிரச்சினை இல்லை.

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பற்றி எவரும் குறிப்பிடவில்லை. வழக்கு எண் மற்றும் வழக்கு தினம் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுவானதொரு விடயமாகும். வழக்கின் தீர்ப்பு என்னவென்பது எமக்கு தெரியாது. நீதிமன்றமே அறியும். ஆனால் குறித்த வழக்குடன் தொடர்புடைய நபர் நன்கு அறிவார். அதனால் தான் தற்போது திணறுகிறார்கள்.

சட்டத்தின் ஆட்சியை சிறந்த முறையில் செயற்படுத்துகிறோம். எதிர்க்கட்சியில் உள்ள ஒருசிலர் தோற்றுவிக்கும் போலியான மாயை அவர்களையே தொடரும்.இது எமக்கு எவ்விதத்திலும் பிரச்சினையாக அமையாது என்றார்.

HSBts-6bwAAGySO

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற சர்வதேசக் கார் பந்தயம்: இங்கிலாந்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

September 13, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைப்பதற்கான முன்னோட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்