இன்று தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்க்கட்சிகளின் மூன்றாவது சந்திப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கிலான மூன்றாவது சந்திப்பு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் புதன்கிழமை (6) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களுக்கு இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள் 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் கடந்த மாதம் 17 ஆம் திகதி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அதனையடுத்து கடந்த மாதம் 18 ஆம் திகதி நட்டத்தரணிகள் பேரவைக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, ‘இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை நாம் அரசாங்கத்துடன் தனித்துச் செயற்படமாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்த பின்னணியில், தற்போது தமிழ்த்தேசியப் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை அந்த ஒற்றுமை முயற்சியைக் குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இவ்வாறு தனித்துச் செயற்படும் வேளையில், விரக்தியளிக்கும் வகையில் உங்களது முயற்சியைத் தொடர்வதன் ஊடாக ஆக்கபூர்வமான அல்லது பயனுறுதிமிக்க விளைவுகளை எட்டக்கூடியதாக இருக்குமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்’ எனக் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின்போது புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் தொடர்பில் தமது கட்சிகளுடன் கலந்துரையாடி இறுதித்தீர்மானத்தை அறிவிப்பதற்குக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் உடன்பட்டிருந்ததன் அடிப்படையில், இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கான சந்திப்பு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் இன்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.