சென்னை: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஐடி துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தொடர்ந்து, முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் சுமார் 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ‘ப்ராஜெக்ட் லீப்’ (Project Leap) என்ற புதிய மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ஏஐ மற்றும் டிஜிட்டல் சேவைகளை வலுப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாகச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், உலகளாவிய பணியாளர்களில் சுமார் 1 சதவீதத்தைப் பணிநீக்கம் செய்யத் தலைமை நிர்வாகி எஸ்.ரவி குமார் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பணிநீக்கத்தில் குறிப்பாக நடுத்தர நிலையில் (Middle-level) உள்ள ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும் என நிறுவனம் நம்புகிறது. ஒருபுறம் பணிநீக்கம் செய்யப்பட்டாலும், மறுபுறம் இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை (Freshers) பணியமர்த்தவும் காக்னிசன்ட் திட்டமிட்டுள்ளது. மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 5.8 சதவீதம் உயர்ந்து 5.41 பில்லியன் டாலராக உள்ள போதிலும், ஏஐ ஆட்டோமேஷன் காரணமாக இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே டிசிஎஸ், ஓராகிள் போன்ற நிறுவனங்களும் இத்தகைய மறுசீரமைப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், காக்னிசன்ட்டின் இந்த அறிவிப்பு ஐடி ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
#Cognizant #ITLayoffs #AI #ProjectLeap #ITJobs #Layoffs2026 #SRaviKumar #TCS #Oracle #ArtificialIntelligence #TechNews #JobMarket #ChennaiIT #GlobalEconomy #Automation #CareerUpdate #BusinessNews #April30 #HiringNews