தேனிசை செல்லப்பா மரணம்: அரசியல் தலைவர்கள் இரங்கல்

தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த தேனிசை செல்லப்பா, தனது 85 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் “பாசறைப் பாணர்” என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

தேனிசை செல்லப்பா மறைவையொட்டி பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல ஈழ விடுதலைப் போராட்டப் பாடகர் தேனிசை செல்லப்பா இன்று (ஏப்.28) காலமானார். இவர் தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டும் வகையில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி, “பாசறைப் பாணர்” என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர், தனது 85 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

இவரது மறைவையொட்டி பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

வைகோ இரங்கல்

ம.தி.மு.க தலைவர் வைகோ, தனது இரங்கல் குறிப்பில், தமிழீழ விடுதலைக்காகவும், தமிழின மறுமலர்ச்சிக்காவும் வாழ்நாள் முழுவதும் இசைக் குயிலாய் இன்னிசை பாடல்களை இசைத்து வந்த தேனிசை செல்லப்பா அவர்கள் இன்று இயற்கையில் இணைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன்.

தென்காசி மாவட்டத்தில், உள்ள சிங்கிலிபட்டி என்ற சிற்றூரில் பிறந்த தேனிசை செல்லப்பாவின் குரல் உலகம் முழுவதும் இன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது. இளம் வயதில் தூத்துக்குடியில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களைச் சந்தித்து, அவரது நாடகக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு நாடகங்களில் நடித்தும், பாடல்களைப் பாடியும் வந்தார்.

தந்தை பெரியார் அவர்கள் மன்னார்குடியில் நடத்திய தேசப் பட எரிப்பு போராட்ட விளக்க மாநாட்டில் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய பாடல், அப்போதைய நாம் தமிழர் இயக்கத் தலைவரான சி.பா.ஆதித்தனாரை பெரிதும் கவர்ந்தது. அவரின் விருப்பப்படி நாம் தமிழர் இயக்க மேடைகளிலும், திராவிடர் கழக மேடைகளிலும் தன்மானப் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி வந்தார்.

தமிழீழ விடுதலைக்காக களமாடிய பேபி சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியால் சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் தலைவர் பிரபாகரன் அவர்களோடு தேனிசை செல்லப்பா அறிமுகமானார். அது முதல் தமிழீழ விடுதலைக்காக தன் எழுச்சிக் குரலால் பாடல் இசைத்து, தமிழ் உணர்வை விதைத்து வந்தார். 1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் கோட்டை மைதானத்தில் ஐந்து இலட்சம் தமிழர்கள் திரண்ட கூட்டத்தில் தேனிசை செல்லப்பாவின் ஈழ விடுதலைப் பாடல்கள் புத்தெழுச்சியை ஊட்டியது.

இலண்டன் மாநகரில் அவருக்கு விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டு, அங்கிருந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் தேனிசை செல்லப்பா அவர்கள் ஊண் உருகப் பாடியபோது, கூடியிருந்த மக்களும் கண்ணீர் சிந்தி தங்கள் துயரத்தை வெளிப்படுத்திய காட்சி காணொலியாய் உலகம் முழுவதும் வலம் வந்தது. வீரத்தின் வேர்கள், தாய் நிலத்து வேலி முதலான பல்வேறு தலைப்புக்களில் ஈழ விடுதலைக்காக பாடிய இவரை, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் பாசறை பாணர் என்று பாராட்டினார்.

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் இலக்கிய அணி நடத்திய பாவேந்தர் விழாக்களிலும், கழகத்தின் கூட்டங்களிலும் தேனிசை செல்லப்பா அவர்கள் பலமுறை பாடி மகிழ்வித்திருக்கிறார். வெளி ஊர்களுக்கு காரில் பயணம் செய்கிறபோது, இரவு, பகல் என எந்த வேளையிலும் அவரது உயித் துடிப்பான பாடல்களைக் கேட்டு மகிழ்வது என் வழக்கம். என் மீதும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் மீதும் அளவற்ற அன்பும், பாசமும், மதிப்பும் கொண்டிருந்த தேனிசை செல்லப்பா அவர்களின் மறைவு தமிழின உணர்வுள்ள அனைவருக்கும் பேரிழப்பாகும்.

தேனிசை செல்லப்பா அவர்களின் மறைவால் துயரத்தில் உள்ள அவரது மனைவி திருமதி விஜயா, அன்பு மகன் இளங்கோவன், ஆருயிர் புதல்விகள் தமிழ்க்கொடி, ராஜேஸ்வரி ஆகியோருக்கும், தமிழ் மக்களுக்கும், ஈழத்தமிழ் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேனிசை செல்லப்பா அவர்கள் தனது உணர்ச்சிமிகு பாடல்களால் எந்நாளும் நம்மோடு வாழ்வார்!” என்று கூறியுள்ளார்.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு