ஊர்வணிகன்பற்று நில அபகரிப்புத் தொடர்பில் ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழுள்ள ஊர்வணிகன்பற்று கிராமத்தில் பல தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்களை இராணுவத் தேவைக்காக நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
ஊர்வணிகன்பற்று கிராமமானது மிக நீண்ட கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதுடன், பல தலைமுறைகளாக தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழ்விடமாகப் பேணி வந்த நிலமாகும். யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை இராணுவத்தினால் இக்காணிகள் கையகப்படுத்தப்பட்டதுடன், இன்றுவரை மக்கள் தமது சொந்த நிலங்களுக்குள் நுழைய முடியாத துர்ப்பாக்கிய நிலையே நீடிக்கின்றது.
​தற்போது இராணுவத்தின் 4வது பட்டாலியன் மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி அமைப்பதற்காகச் சுவீகரிக்கப்படவுள்ள முப்பது(30) ஏக்கர் நிலப்பரப்பானது, இருபது தனிப்பட்ட உரிமையாளர்களுக்குச் சொந்தமானதாகும். இவ்விடத்திலேயே மக்களின் வாழ்விடங்கள், வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகள் மற்றும் அவர்களது கலை, கலாசார விழுமியங்களுடன் ஒன்றிய முத்துமாரி அம்மன் ஆலயம், பொது நோக்கு மண்டபம், சிறுவர் முன்பள்ளி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் சமூகக் கட்டமைப்புகளும் அமைந்துள்ளன. தமது பூர்வீக அடையாளங்கள் அனைத்தையும் கொண்ட இந்த நிலத்தை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்கில், கடந்த 2026.04.02 அன்று இராணுவத்தினால் நில அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்தன. எனினும், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் தன்னெழுச்சியான எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இப்பணிகள் அன்றையதினமே இடைநிறுத்தப்பட்டது.
​இவ்விடயத்தின் பாரதூரமான தன்மையைக் கருத்திற்கொண்டு, கடந்த 2026.04.07 அன்று என்னால் நாடாளுமன்றத்தில் கௌரவ சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்களையும் சபையில் பதிவு செய்திருந்தேன். தொடர்ந்து அன்றையதினம் மாலை 02.00 மணிக்கு தங்களின் தலைமையில் பாராளுமன்ற குழு அறை 01 இல் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு தொடர்பான அமைச்சு சார் ஆலோசனைக் கூட்டத்திலும் இக் காணி விடயம் தொடர்பில் தங்களுக்கு தெளிவாக விளக்கப்படுத்தப்பட்டிருந்தது. “மக்களின் நிலம் மக்களுக்கே” என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில் நின்றும், மக்களின் நலன் சார்ந்தும் செயற்பட்டு வரும் தாங்கள் தமிழ் மக்களின் இப்பூர்வீக சொந்த நிலத்தை விடுவிப்பீர்கள் என்ற மிகுந்த நம்பிக்கையினை கொண்டுள்ளனர்.
தமது சொந்த நிலங்களை இழந்து, தற்போது வாழ்வாதாரத்திற்காகக் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இம்மக்களுக்கு அறத்தின்பாற்பட்ட நீதி வழங்கப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
​எனவே, இக்காணிகளின் பூர்வீக உரிமையாளர்களான தமிழ் பொது மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாகச் சுவீகரிக்க எடுக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, காணியின் உண்மையான உரிமையாளர்களான தமிழ் பொது மக்களிடமே இக்காணியினை வழங்க ஏற்பாடு செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.” என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
jud

திறைசேரி நிதி மோசடி: 5 அதிகாரிகளுக்கு வௌிநாடு செல்லத் தடை

April 29, 2026

மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம்

anur

ஜனாதிபதி மற்றும் மகா சங்கத்தினருக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

April 29, 2026

போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேரர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதன் பின்னணியில் உருவாகியுள்ள

gam

கம்பளையில் பயங்கர மண்சரிவு

April 29, 2026

கண்டி மாவட்டம், கம்பளை நகருக்கு அருகிலுள்ள கஹட்டபிட்டிய பகுதியில் இன்று (29) காலை பயங்கர மண்சரிவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

eft

வெள்ளை மாளிகைக்கு முன்பாக எப்ஸ்டீன் விவகாரத்தை வெளிச்சம் போட்ட திரை வாகனம்

April 29, 2026

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு முன்பாக நேற்று ஒரு பரபரப்பான காட்சி அரங்கேறியது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய

HHDrDs7aoAA-rnx

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு தாயகத்தில் அஞ்சலி

April 29, 2026

தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சி பாடல்கள் பல நூறு பாடல்களை பாடி 28.04.2026 அன்று மறைந்த பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா

shammy sil

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ்: ஷம்மி சில்வா தலைமையிலான குழு இராஜினாமா

April 29, 2026

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் வழங்கிய இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்

US-EMbassy-1

வடக்கு மக்களுடன் கலாச்சார விழுமியங்களை பகிர்ந்து கொள்வதில் அமெரிக்காஉறுதியாக உள்ளது.. யாழில் மேனகா நய்யர் தெரிவிப்பு.

April 29, 2026

div]:bg-bg-000/50 [&_pre>div]:border-0.5 [&_pre>div]:border-border-400 [&_.ignore-pre-bg>div]:bg-transparent [&_.standard-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.standard-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8 [&_.progressive-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.progressive-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8″> _*]:min-w-0 gap-3 standard-markdown”> அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும்

chandrasekar

.யாழ்ப்பாண மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அமைச்சர் சந்திரசேகரன் கண்டனம்

April 29, 2026

யாழ்ப்பாணக் கடற்றொழிலாளர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டு, இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும்

archuna gun

அர்ச்சுனா பிணையில் விடுதலை

April 29, 2026

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி பெரியவிளான்

Electricity Tariff-710053

மின்சாரக் கட்டணத் திருத்தம்: மே 9 ஆம் தேதி இறுதி முடிவு

April 29, 2026

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு மே மாதம் 9 ஆம் தேதி

Nalinda Jayatissa Cabinet Meet-790605

$2.5 மில்லியன் திறைசேரி திருட்டு: அமைச்சரவை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவில்லை

April 29, 2026

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த 2.5 மில்லியன் டாலர் நிதி திருட்டு மற்றும் அது குறித்த விசாரணைகள் பற்றி

(c)PragMatrix

புதுச்சேரி மதுபானத்தை தமிழகத்திற்குள் கொண்டு வரலாமா? – சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அவசர முறையீடு!

April 29, 2026

சென்னை: புதுச்சேரியில் இருந்து தனிநபர் ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சமூக