வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கஜனாதிபதியையும் முதல் பெண்மணியையும்அந்த இடத்திலிருந்து
விசேட படைப்பிரிவினர் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்
பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கை:
அமெரிக்கஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி மேடையிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க இரகசியப் பொலிஸின் மின்னல் வேகத் தாக்குதல் குழுவினர் (Counter Assault Team – CAT) அந்த இடத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்
, அமெரிக்கஜனாதிபதி வெளியேற்றப்பட்ட சில நிமிடங்களில், மற்றொரு முக்கிய பிரமுகரை (Protectee) பாதுகாப்புக் குழுவினர் அவசரமாக அழைத்துச் சென்றனர். இதன்போது அங்கிருந்த ஏனைய விருந்தினர்கள் தரையில் பதுங்கியிருக்க, பாதுகாப்பு அதிகாரிகள் மேசைகள் மற்றும் நாற்காலிகளுக்கு மேலால் பாய்ந்து சென்று அந்தப் பிரமுகரை மீட்டனர்.
சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அங்கிருந்த இரும்புத் தடுப்புகளை (Bike racks) தள்ளிவிட்டு, மிகவும் துரிதமாக அந்தப் பிரமுகரை மண்டபத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றதாக சிபிஎஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.
தற்போது அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதத்திற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.