செட்டிபாளையம் கடற்கரை மீனவரை முழங்காலில் இருத்திச் சித்திரவதை: கடற்படை அதிகாரிக்கு பிணை

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் இருத்தித் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரியைக் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தை மீண்டும் விசாரணை செய்து, 1994-ஆம் ஆண்டின் 22-ஆம் இலக்கச் சித்திரவதை தடுப்பு தண்டனைச் சட்டத்தின் கீழ் போதிய சாட்சியங்களுடன் எதிர்வரும் மே 22-ஆம் திகதி புதிய வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டார்.

செட்டிபாளையம் கடற்கரையில், கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த 5-ஆம் திகதி சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நந்தீசன் என்பவர் சுருக்கு வலை பயன்படுத்தியதாகவும், ஈயம் வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி அவரைக் கைது செய்துள்ளனர். அங்கு அவரை சுமார் 2 மணிநேரம் முழங்காலில் இருத்தி அடித்துச் சித்திரவதை செய்ததாகப் பாதிக்கப்பட்ட மீனவர் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 8-ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து, பொலிஸார் குறித்த கடற்படை அதிகாரியைப் புதன்கிழமை கைது செய்து களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். இதன்போது, பொலிஸார் தண்டனைச் சட்டக்கோவையின் 314-ஆம் பிரிவின் கீழ் (சாதாரண காயம் விளைவித்தல்) வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

பாதிக்கப்பட்டவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். “பாதிக்கப்பட்டவரை முழங்காலில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்துள்ளமை பாரதூரமான செயலாகும். இதனை 1994-ஆம் ஆண்டின் 22-ஆம் இலக்கச் சித்திரவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யாமல், பொலிஸார் எதிராளிக்குச் சாதகமாகச் சாதாரண பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். மேலும், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பொலிஸார் நேரடியாகப் பதிவு செய்திருந்தும் அவற்றை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர்,” எனத் தனது வாதங்களை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், பொலிஸார் தற்போது 314-ஆம் பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளதால் அந்தப் பிரிவின் கீழ் கடற்படை அதிகாரியை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

TRUMP OVAL

விட்காஃப் மற்றும் குஷ்னரின் இஸ்லாமாபாத் பயணத்தை ட்ரம்ப் ரத்து செய்தார் –

April 25, 2026

தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) இனி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லமாட்டார்கள் என்று

thyity

தையிட்டியில்_சட்டவிரோத திஸ்ஸவிகாரைக்காக நில அபகரிப்பு முயற்சி? அரசாங்க அதிபருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவசர கடிதம்!

April 25, 2026

தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள மக்களின் காணிகளை ‘காணி உரித்து

5K2OIUJ5TZHGBPE23E4PGQTOUI

உலகப் புகைப்படக் கிண்ணத்தில் கனடாவுக்குத் தங்கம்:

April 25, 2026

ஐஸ்லாந்தில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான உலகப் புகைப்படக் கிண்ணப் போட்டியில், வனவிலங்குப் பிரிவில் (Wildlife category) மிச்செல் வால்பெர்க் தங்கப்

2ZECXWEPX5EXFBJ4EFHSLCBJD4

சீக்கிய முதியவர் மீது இனவெறித் தாக்குதல்: வுட்ஸ்டாக் இளைஞர் மீது வழக்குப்பதிவு

April 25, 2026

கனடாவின் ஒண்டாரியோ மாகாணம், வுட்ஸ்டாக் பகுதியில் முதியவர் ஒருவரைத் தள்ளிவிட்டு, இனவெறி கருத்துக்களைக் கூறி மிரட்டிய இளைஞர் ஒருவர் மீது

C2KBHBHB3JFXZPJT3JH462QNDA

பிராம்ப்டன் விபத்து: பாதசாரி ஒருவருக்கு கவலைக்கிடமான காயம்

April 25, 2026

பிராம்ப்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் பாதசாரி ஒருவர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது

kasy

கஸ்ஸப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் – சுமந்திரன்

April 25, 2026

யாழ். நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு

canada police26

பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த பாதசாரி மீது மோதிய வாகனம்: பெண் ஒருவர் பலத்த காயம்

April 25, 2026

டொராண்டோவின் எட்டோபிகோக் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பேருந்து தரிப்பிடம் (Bus Shelter) ஒன்றிற்குள் வாகனம் புகுந்ததில் 53 வயது பெண்

6JMOXKLTHJCKLBVUSEY43I76XE

டொராண்டோ துப்பாக்கிச் சூடு: 30 வயது நபர் பலி; மூன்று சந்தேக நபர்களைத் தேடும் காவல்துறை

April 25, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது

vima

வடக்கு மாகாண பேருந்து சேவை மீதான முறைப்பாடுகள் விரைவில் நிவர்த்திக்கப்படும்

April 25, 2026

வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையினால் (இ.போ.ச.) முன்னெடுக்கப்படும் சில பேருந்து சேவைகளில் நிலவும் சீரின்மை மற்றும் காலதாமதங்கள் குறித்துப்

KJE3Q6LK5UYAXTBIES3VGNIG24

பர்னபி இளைஞன் கொலை வழக்கு: 4 கொள்ளையர்களில் இரண்டாவது நபருக்கு சிறைத்தண்டனை

April 25, 2026

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபியில் (Burnaby) வசித்த 19 வயது இளைஞன் ரியான் நாகி

MEQXKJMDPG7FYCUATJCSGZDBQA

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு: பிலிப்பைன்ஸ் போர் பயிற்சியில் முதன்முறையாக கனடா பங்கேற்பு

April 25, 2026

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது ஈடுபாட்டை அதிகரிக்கும் ஒரு “முக்கியமான நடவடிக்கையாக”, பிலிப்பைன்ஸில் நடைபெறும் ‘பாலிகாட்டன்’ (Balikatan) கூட்டுப் போர் பயிற்சியில்

it cyber jobs

திறைசேரி மீதான சைபர் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் – நிபுணர் கருத்து

April 25, 2026

அண்மையில் திறைசேரியின் 2.5 மில்லியன் டாலர் நிதி திருடப்பட்ட சம்பவம், ‘பிசினஸ் ஈமெயில் காம்ப்ரமைஸ்’ (Business Email Compromise –