தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள மக்களின் காணிகளை ‘காணி உரித்து நிர்ணய திணைக்களம்’ ஊடாக அளவீடு செய்ய எடுக்கும் முயற்சிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:
மக்களின் விருப்பத்திற்கு மாறான அளவீடு:
தமது காணிகளை விடுவிக்கக் கோரி 17 ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், உரிமையாளர்களின் ஆட்சேபனையையும் மீறி வரும் 28.04.2026 அன்று காணி அளவீடுகளை மேற்கொள்ள மாவட்ட செயலகம் திட்டமிட்டுள்ளது.
விகாரையை நிலைப்படுத்தும் சதி?
பிரதேச செயலாளரின் கடிதத்தில் “திஸ்ஸ விகாரை தொடர்பான காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான அளவீடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டவிரோத விகாரையை அங்கீகரிக்கவும், அதற்கு காணிகளை கையகப்படுத்தவும் முயற்சி நடப்பதாக உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர்.
அடையாளங்கள் அழிக்கப்பட்ட நிலம்:
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்தின் வசம் இருந்த இக்காணிகளில் இருந்த வேலிகள், மரங்கள், கட்டடங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திடீரென எல்லைகளைக் காண்பிக்குமாறு உரிமையாளர்களைக் கோருவது அநீதியானது.
அவசர கதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை:

வெவ்வேறு இடங்களில் வசிக்கும் உரிமையாளர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்காமல், தபால் மூலம் கடிதம் அனுப்பாமல் தொலைபேசி ஊடாக மட்டும் அறிவித்து அவசரமாக அளவீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கோரிக்கைகள்: