காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் சமூக அமைப்புகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உடனான கலந்தாய்வு

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் (OMP)காணாமல் போன நபர்களுடைய குடும்பங்களினை வலுப்படுத்துவதற்கும் OMP ஆணையினை சிறப்பாக நிறைவேற்றுவதற்குமான கூட்டான்மைகளை ஏற்படுத்துவதற்கு சமூக அமைப்புக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
விசாரணைக் குழுக்களால் வழங்கப்படும் பரிந்துரைகளைத் திறம்படச் செயற்படுத்துவதற்கு, காணாமல் போனோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தேவைகள் குறித்த ஒரு முழுமையான புரிதல் தேவைப்படுகிறது.
இந்த நோக்கத்திற்காக, OMP யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகளுடன் ஒரு கலந்தாய்வு நிகழ்வினை காணமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக தலைமையக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இன்றைய தினம் (23.04.2026) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களுக்கு காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் (OMP) சட்டத்தின் அம்சங்கள், சிவில் அமைப்புக்களின் பங்களிப்புகள் மற்றும் OMP யுடன் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வழிகள் குறித்து தெளிவூட்டல்களை வழங்கி வழிகாட்டுவதே இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
இக் கலந்தாய்வில் பின்வருவோரால் பின்வரும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
01.காணாமல் போனோர் அலுவலகத்தின்(OMP) பங்கு, அதிகாரம் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக
திரு. ஏ. என். நுவான் அவர்களால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.

02.காணாமல் போனவர்கள் பிரச்சினைகள் குறித்த கண்ணோட்டம், தற்போதைய நிலைமை மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்தும் உறுப்பினர் திரு. மீராக் ரஹீம் அவர்களால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
03.காணாமல் போன நபர்களின் குடும்பங்களின் தேவைகளை OMP பிரதிநிதியால் கண்டறிந்து புரிந்துகொள்ளுதல் தொடர்பாக உறுப்பினர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களாலும் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.
04.காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ் தொடர்பான விளக்கத்தினை வடமாகாண பிரதி பதிவாளர் நாயகம் செல்வி ஆனந்தி ஜெயரத்னம் அவர்கள் வழங்கினார்.
மேலும், உளவியல், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகள் குறித்து விரிவான கலந்துரையாடப்பட்டதுடன், இது கேள்வி பதிலுடன் கூடிய கலந்துரையாடலாகவும் அமைந்திருந்தது.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்து சிவில் சமூக அமைப்புகள் கலந்துரையாடுவதற்கான தனி அமர்வுகளாகவும் அமைந்திருந்ததுடன், OMP பிரதிநிதியின் ஒத்துழைப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்தாய்வு நடைபெற்றது.
இக் கலந்தாய்வில் திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், காணாமல் போன ஆட்கள் அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் திரு. த.செல்வகுமார், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந.தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு. ம கண்ணதாசன், திருமதி. சிவாஜினி புலேந்திரகுமார், திருமதி திவ்யா கஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலகர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய நல்லிணக்க அபிவிருத்தி உத்தியவர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Durai-Vaiko

“கொளத்தூரில் திமுக தலைவருக்கு மக்கள் பிச்சை போடவில்லையே!” – பண்ணையார் அரசியல் குறித்து திமுகவைச் சாடிய துரை வைகோ

September 14, 2026

திருச்சி: தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் திமுக போட்ட ‘பிச்சை’ என விமர்சித்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ள மதிமுக எம்.பி.

C_1_1_CH0820_102349139

வாரம் 5 நாட்கள் வேலை: கோரிக்கை நிறைவேறாவிட்டால் அக். 6 முதல் வங்கி ஊழியர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தம்!

September 14, 2026

தஞ்சாவூர்: வாரம் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், செப்டம்பர் 28 முதல் 3 நாள்கள்

omni-buses-strike

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க செப். 16 வரை சிறப்புத் தணிக்கை: போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

September 14, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 16-ஆம்

dailythanthi_2026-09-13_y7qxw1ii_109

இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்!

September 14, 2026

சென்னை: மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் களப்பணிகளை ஒருங்கிணைக்கத் தேர்தல்

முதல்வர்-விஜய் (1)

“ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் பெருகட்டும்!” – விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

September 14, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள

images - 2026-09-13T223944.293

“வரலாற்றில் முதல்முறையாக 3-வது இடத்திற்குப் போன திமுக; பதற்றத்தில் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் விளாசல்

September 14, 2026

நாகப்பட்டினம்: சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக திமுக கூட்டணி 59 தொகுதிகளில் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதன் விரக்தியிலும் பதற்றத்திலும்தான், அboard

fefef

“மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது!” – திருமாவளவன்

September 14, 2026

சிவகாசி: பட்டினப்பாக்கம் மக்களின் ஒப்புதல் இல்லாமல், அங்கு தமிழ்நாடு அரசால் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட முடியாது என்று விடுதலைச்

mark carney55

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லிபரல் கட்சி பழமைவாதக் கட்சியை விட 14 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது

September 14, 2026

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் லிபரல் கட்சி பழமைவாதக் கட்சியை விட 14 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது என

WhatsApp Image 2026-09-14 at 07.00.38

தடைகளை நீக்கியருளும் விநாயகர் சதுர்த்தி விரதம் இன்று !

September 14, 2026

பிள்ளையார் பூஜை என்பது ஒருநாள் கொண்டாடும் விழாவாக மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் நமக்கு வளமும் வளமையும் தரும் ஆன்மீக பாதையை

MediaFile_20260913_220352_145

அராலியில் இளைஞர் மீது வாள்வெட்டு – நால்வர் கைது

September 14, 2026

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்

cas

மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

September 14, 2026

உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. சவூதி அரேபியாவின்

ac

விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை பலி!

September 14, 2026

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், பாலமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே