லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பி.எல்) ஜூலை 10ஆம் திகதி முதல் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை போட்டிகள் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் முதன்முறையாக நடைபெறவுள்ளது.
இந்த ஆறாவது பருவகாலமானது உண்மையாக கடந்தாண்டு இறுதியில் நடைபெறவிருந்து சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கு தயார்படுத்தலாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை தொடரில் ஆறாவது அணியை இணைப்பது குறித்தும் தகவல்கள் வெளியாகிய நிலையில் எதுவித உத்தியோகபூர்வ அறிக்கைகளும் வெளியாகவில்லை.