நாடாளுமன்றத்தின் பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குமார குலரத்ன (Chaminda Kumara Kularatne) வெளிநாடு செல்வதற்கு லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.
இவரது ஆரம்ப நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றப் பணியாளர் ஆலோசனைக் குழுவினால் இவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நியமன முறைகேடு தொடர்பாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
பயணத்தடை: இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவருக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் இந்த பிரதி பொதுச்செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.