பொதுமக்களின் பலத்த அழுத்தம் காரணமாகவே இந்தப் பதவி விலகல்- லசந்த அழகியவண்ண

வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகியமையானது எதிர்க்கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், “சமூக ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் பலத்த அழுத்தம் காரணமாகவே இந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. ஆனால், அரசாங்கம் இதனை ஒரு சுயாதீன விசாரணைக்கான நடவடிக்கை எனக்கூறி நியாயப்படுத்த முயல்கின்றது.

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, ஆளுங்கட்சியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்விதத் தவறும் நடக்கவில்லை எனக் கூறி அரசாங்கத்தைப் பாதுகாத்தனர். ஆனால், அன்று நாடாளுமன்றத்தில் நிரூபிக்க முடியாத உண்மைகள் இன்று மக்கள் முன்னிலையில் நிரூபணமாகியுள்ளன.

நிலக்கரி கொள்வனவு நடைமுறையில் பாரிய முறைகேடுகள் காணப்படுவதாகத் தணிக்கை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஊழலை ஒழிப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த இரண்டு வருடங்களாகப் பழைய ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்போது இவர்களது முதலாவது நிலக்கரி டெண்டர் சர்ச்சைக்குள்ளானதும், 2009 ஆம் ஆண்டு முதல் விசாரிக்க வேண்டும் எனக் கூறுவது முறையற்றது” என்று குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயாராக இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “தாம் தலைமைத்துவத்திற்குத் தகுதியானவர் என்று கூறுவதற்கு நாமல் ராஜபக்சவுக்கோ அல்லது எதிர்க்கட்சியில் உள்ள எவருக்கும் உரிமை உண்டு.

எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு என ஒரு தனித்துவமான அடையாளம் உள்ளது. இறுதியில் யார் தகுதியானவர் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

அரசாங்கம் குற்றவாளிகளைப் பாதுகாப்பதை விடுத்து, வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று லசந்த அழகியவண்ண இதன்போது வலியுறுத்தினார்.

fa

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

April 21, 2026

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு

japp

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத்

prema

பிரேமலால் ஜயசேகர எம்.பி. கைது

April 21, 2026

‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

G_Q4Ze7WQAAHCyq

தீயசக்தி திமுக.. பாசிச பாஜக.. அக்குவேறாக பிரித்து எறிவோம்! “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க விஜய் உருக்கமான வேண்டுகோள்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான

Malcolm-Cardinal-Ranjith

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; முட்டுக்கட்டைகள் குறித்து கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை

April 21, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்

Mid photos new.00_01_08_07.Still034_

சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை! “மாற்றத்திற்கு ஒரே வழி நாம் தான்” – சீமான் உருக்கம்

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ளது. 234

IRAN ARMY111

போர்க்களத்தில் ‘புதிய வியூகங்களை’ (New Cards) வெளிப்படுத்தத் தயாராகிறது ஈரான்

April 21, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்கு இன்னும் சில நேரங்களே உள்ள நிலையில், மேலதிக

pak16

இஸ்லாமாபாத்தில் தயார்நிலைகள்: பேச்சுவார்த்தைகள் நடக்குமா என்பதில் தொடரும் நிச்சயமற்ற தன்மை

April 21, 2026

இன்று காலை இஸ்லாமாபாத்தில் சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. தலைநகர் வழியாகப் பயணம் செய்யும் போது, பாதுகாப்புச்

ele co

தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தாமதம்: தேர்தல் ஆணைக்குழு அதிருப்தி

April 21, 2026

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேர்தல் சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கமும் எதிர்க்கட்சியும் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என தேர்தல்

arrest-1

10 லட்சம் ரூபாய் வங்கி மோசடி: போலி இணையதளத்தை உருவாக்கிய இளைஞர் கைது

April 21, 2026

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்றே ஒரு போலி இணையதளத்தை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ்

easter bomb 2026

இலங்கையில்உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் : ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காகக் காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்கள்

April 21, 2026

(AFP) நீர்கொழும்பு, இலங்கை – இலங்கையில் 279 பேரைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,

namal raja

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை அரசாங்கம் அரசியலாக்குவதாக நாமல் குற்றச்சாட்டு

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அரசியலாக்கி வருவதாகவும், தெரிவு செய்யப்பட்ட நபர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து