கரடி பொம்மைக்குள் மறைத்து ‘ஐஸ்’ போதைப்பொருள் விவகாரம்: ’தோடம்பழம்’ உறுப்பினருக்கு விளக்கமறியல்

கொரியர் (Courier) சேவை ஊடாக கரடி பொம்மைக்குள் மறைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8) மாலை, அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம். பிரியங்கர தலைமையிலான குழுவினரே இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை 120 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறும், ஏப்ரல் 13-ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

சந்தேக நபர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், வழக்கினை ஏப்ரல் 20-ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் (D.C.D.B) பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்நாயக்கவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

கைதான 43 வயதுடைய சந்தேக நபர், காரைதீவு பிரதேச சபையில் ‘தோடம்பழம்’ சுயேட்சைக் குழுவின் முன்னாள் உறுப்பினராகப் பணியாற்றியவர் ஆவார். கொரியர் மூலம் வந்த விளையாட்டுப் பொருட்களில் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் சூட்சுமமாக மறைக்கப்பட்டிருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருள் இவரிடமிருந்து மீட்கப்பட்டது.

அத்துடன், போதைப்பொருள் அளக்கப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் தராசு, 2 கைத்தொலைபேசிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பனவும் சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்பார்வை: கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரையின் கீழ், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி ஆகியோரின் வழிகாட்டலில் இந்தச் சோதனை நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

ar

அமெரிக்காவின் செய்தியுடன் ஈரான் சென்றார் பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் : ஈரான் அரசு ஊடகம் தகவல்

April 15, 2026

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்துள்ள பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் (Asim Munir), உயர்மட்டக்

ssds

கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வாய்ப்பு?

April 15, 2026

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb), கனடா பிரதமர் மார்க் கார்னியுடனான (Mark Carney) தனது முதல் அதிகாரப்பூர்வ

str

நெடுந்தீவு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்னிறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

April 15, 2026

நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி ‘நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு’ போராட்டத்திற்கான

ssss

யாழ்ப்பாணத்தின் 800 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் புதிய நூல் வெளியீடு

April 15, 2026

பிரபல வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் எழுதிய “Glimpses of an Ancient Civilization, Society and Culture in Jaffna

dea

விசேட அதிரடிப்படையின் ஜீப் மோதி முதியவர் பலி: சாரதி கைது

April 15, 2026

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கன்னங்குடா, புதுமண்டபத்தடி பகுதியைச் சேர்ந்த

d

விபத்திற்கான இழப்பீடு பெற 8 மாதங்கள் வரை காத்திருந்தது குறித்து ஒன்டாரியோ வாகன சாரதி அதிருப்தி

April 15, 2026

ஒரு கடுமையான விபத்திற்குப் பிறகு, தனது கார் காப்பீட்டு (Insurance) நிறுவனத்தின் சிக்கலான நடைமுறைகளால் எட்டு மாதங்களாக வாகனம் இல்லாமல்

dd

வளைகுடா கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அச்சுறுத்தல்?

April 15, 2026

ஈரானின் ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் மிக உயர்ந்த செயல்பாட்டுத் தலைமையகமான ‘காதம் அல்-அன்பியா’ (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் தளபதி

ha

நோவா ஸ்கோடியா ஹாக்கி ‘ஹேஸிங்’ விபரீதம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

April 15, 2026

நோவா ஸ்கோடியாவில் (Nova Scotia) ஹாக்கி விளையாட்டில் நடந்த “ஹேஸிங்” (புதியவர்களைத் துன்புறுத்தும் கலாச்சாரம்) தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கில்

Miss

மிசிசாகாவில் வாகனம் மோதி ஒருவர் பலி: காவல்துறை தீவிர விசாரணை

April 15, 2026

மிசிசாகாவில் (Mississauga) புதன்கிழமை அதிகாலை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி குறித்துப் புலனாய்வு செய்து வருவதாகக் காவல்துறை

acc

விபத்தில் இருவர் படுகாயம்

April 15, 2026

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் பகுதியில், 13 ஆம் திகதியன்று பிற்பகல் தனியார் பேருந்தும் முச்சக்கர

a

அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்

April 15, 2026

புத்தாண்டு தினத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 57.5 கிலோ கிராம் எடையுள்ள அழுகிய கோழி

v

அமெரிக்காவுடன் தொடர்ந்து செய்திகளைப் பரிமாறி வருகிறோம் – ஈரான் வெளியுறவு அமைச்சகம்

April 15, 2026

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தர் மூலமாகத் தொடர்ந்து தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக