தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசமைப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – தவெக தலைவர் விஜய்

“தொகுதி மறுவரையறை ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை. எனவே, தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியை கைவிட வேண்டும்,” என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் சமூகவலைப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ‘அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026’ மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது.

இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, ‘அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும்.

அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும்.

இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும். ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு ‘தண்டனை’யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு ‘வெகுமதி’யையும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை – விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை.

அப்படி இருக்கையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது. இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ar

அமெரிக்காவின் செய்தியுடன் ஈரான் சென்றார் பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் : ஈரான் அரசு ஊடகம் தகவல்

April 15, 2026

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்துள்ள பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் (Asim Munir), உயர்மட்டக்

ssds

கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வாய்ப்பு?

April 15, 2026

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb), கனடா பிரதமர் மார்க் கார்னியுடனான (Mark Carney) தனது முதல் அதிகாரப்பூர்வ

str

நெடுந்தீவு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்னிறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

April 15, 2026

நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி ‘நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு’ போராட்டத்திற்கான

ssss

யாழ்ப்பாணத்தின் 800 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் புதிய நூல் வெளியீடு

April 15, 2026

பிரபல வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் எழுதிய “Glimpses of an Ancient Civilization, Society and Culture in Jaffna

dea

விசேட அதிரடிப்படையின் ஜீப் மோதி முதியவர் பலி: சாரதி கைது

April 15, 2026

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கன்னங்குடா, புதுமண்டபத்தடி பகுதியைச் சேர்ந்த

d

விபத்திற்கான இழப்பீடு பெற 8 மாதங்கள் வரை காத்திருந்தது குறித்து ஒன்டாரியோ வாகன சாரதி அதிருப்தி

April 15, 2026

ஒரு கடுமையான விபத்திற்குப் பிறகு, தனது கார் காப்பீட்டு (Insurance) நிறுவனத்தின் சிக்கலான நடைமுறைகளால் எட்டு மாதங்களாக வாகனம் இல்லாமல்

dd

வளைகுடா கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அச்சுறுத்தல்?

April 15, 2026

ஈரானின் ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் மிக உயர்ந்த செயல்பாட்டுத் தலைமையகமான ‘காதம் அல்-அன்பியா’ (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் தளபதி

ha

நோவா ஸ்கோடியா ஹாக்கி ‘ஹேஸிங்’ விபரீதம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

April 15, 2026

நோவா ஸ்கோடியாவில் (Nova Scotia) ஹாக்கி விளையாட்டில் நடந்த “ஹேஸிங்” (புதியவர்களைத் துன்புறுத்தும் கலாச்சாரம்) தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கில்

Miss

மிசிசாகாவில் வாகனம் மோதி ஒருவர் பலி: காவல்துறை தீவிர விசாரணை

April 15, 2026

மிசிசாகாவில் (Mississauga) புதன்கிழமை அதிகாலை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி குறித்துப் புலனாய்வு செய்து வருவதாகக் காவல்துறை

acc

விபத்தில் இருவர் படுகாயம்

April 15, 2026

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் பகுதியில், 13 ஆம் திகதியன்று பிற்பகல் தனியார் பேருந்தும் முச்சக்கர

a

அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்

April 15, 2026

புத்தாண்டு தினத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 57.5 கிலோ கிராம் எடையுள்ள அழுகிய கோழி

v

அமெரிக்காவுடன் தொடர்ந்து செய்திகளைப் பரிமாறி வருகிறோம் – ஈரான் வெளியுறவு அமைச்சகம்

April 15, 2026

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தர் மூலமாகத் தொடர்ந்து தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக