மெரிக்க மற்றும் ஈரானிய தூதுக்குழுக்களுக்கு இடையே பாகிஸ்தானின் பங்கேற்புடன் நேருக்கு நேர் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் அரசாங்க வட்டாரங்களும் முன்னதாக பிபிசியிடம் (BBC) இதையே தெரிவித்திருந்தன.
அமெரிக்க தரப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள் குறித்த மேலதிக விபரங்களை அந்த அதிகாரி வழங்கியுள்ளார். ஏற்கனவே செய்திகளில் வெளியானது போல, முக்கிய குழுவில் பின்வருவோர் இடம்பெற்றுள்ளனர்:
ஜே.டி. வேன்ஸ் (JD Vance) – துணை அதிபர்
ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) – சிறப்புத் தூதர்
ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) – டிரம்பின் மருமகன்
மூத்த அதிகாரியின் கூற்றுப்படி, விரிவுபடுத்தப்பட்ட அமெரிக்க தூதுக்குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆண்ட்ரூ பேக்கர் (Andrew Baker) மற்றும் ஆசிய விவகார ஆலோசகர் மைக்கேல் வேன்ஸ் (Michael Vance) ஆகியோரும் இணைந்துள்ளனர்.