மொண்ட்ரியலுக்கு வந்திருந்த ஒண்டாரியோவைச் சேர்ந்த ஒருவர், தனது ஹோண்டா அக்கார்ட் (Honda Accord) காரை நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் காலை பார்த்தபோது கார் காணாமல் போயிருந்தது.
குற்றக் கும்பல்களின் பழிவாங்கலுக்கு அஞ்சி தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த நபர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து காப்பீட்டுத் தொகையையும் பெற்றுக்கொண்டார். ஆனால், அதன் பிறகு அந்த காரைப் பற்றி அவருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
மூன்று வாரங்களுக்குப் பிறகு, மொண்ட்ரியலின் செயின்ட்-லாரன்ட் பகுதியில் உள்ள ஒரு கிடங்கை கண்காணித்துக் கொண்டிருந்த காவல்துறையினர், அந்தத் திருடப்பட்ட கார் ஒரு கப்பல் கொள்கலனில் (Shipping Container) ஏற்றப்படுவதைக் கண்டனர். காரை கொள்கலனின் உட்புறமாக வைத்து, அதற்கு முன்னால் இரண்டு பழைய கார்களையும், பின்னர் மெத்தைகளையும் அடுக்கி மறைத்ததை அதிகாரிகள் தொலைவில் இருந்து கவனித்தனர்.
மெத்தை ஏற்றுமதிக்கு பின்னால் நடந்த கடத்தல்
அந்தக் கிடங்கு ஆல்பர்ட் லாஜிஸ்டிக் (Albert Logistique) என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. இது ஆபிரிக்காவிற்கு மெத்தைகளை ஏற்றுமதி செய்வதாக கியூபெக் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வணிகமாகும்.
ஆனால், CBC பெற்றுக்கொண்ட காவல்துறையின் விசாரணை ஆவணங்களின்படி, அந்தக் கிடங்கு மெத்தைகளை அனுப்ப மட்டும் பயன்படுத்தப்படவில்லை; அது திருடப்பட்ட கார்களை அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் கடத்தும் ஒரு பெரிய வலையமைப்பின் தலைமையகமாகச் செயல்பட்டுள்ளது.
இந்த வலையமைப்பின் பின்னணியில் இருக்கும் நபர் ஆல்பர்ட் ஷியோயோ (Albert Tshiyoyo) என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். தற்போதைய CBC புலனாய்வின்படி, ஷியோயோ இப்போதும் ஒரு ஏற்றுமதியாளராகச் செயல்பட்டு வருகிறார். அவர் செயின்ட்-லாரன்ட் பகுதியில் உள்ள ஒரு புதிய கிடங்கின் மூலம் மெத்தைகளையும் கார்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறார்.
ஆல்பர்ட் ஷியோயோவின் கிடங்கு 2024-இல் சோதனையிடப்பட்டு, அங்கிருந்து ஏற்றுமதிக்குத் தயாராக இருந்த திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்ட போதிலும், 2026 மார்ச் மாதம் வரை அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.
தற்போது அவர் C&N Matelas express inc. என்ற புதிய மெத்தை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அண்மையில் CBC செய்தியாளர் அந்தக் கிடங்கிற்குச் சென்றபோது, அங்கும் மெத்தைகளுடன் கார்கள் கொள்கலன்களில் ஏற்றப்படுவதைக் கண்டுள்ளார். அங்கிருந்த ‘மேரி’ என்ற ஊழியர், தாங்கள் கார்களை ஏற்றுமதி செய்வதை ஒப்புக்கொண்டார், ஆனால் அவை திருடப்பட்டவை அல்ல என்றும், சட்டப்பூர்வமானவை என்பதை தாங்கள் சரிபார்ப்பதாகவும் கூறினார்.
மொண்ட்ரியால் ஒரு முக்கியத் துறைமுக நகரம் என்பதால், இங்கிருந்து தானியங்கள், மரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஏற்றுமதி வாய்ப்பைப் பயன்படுத்தி, திட்டமிட்ட குற்றக் கும்பல்கள் திருடப்பட்ட கார்களைக் கடத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மொண்ட்ரியால்முழுவதும் பரவி இருப்பதாகவும், அவர்கள் வெவ்வேறு பெயர்களில் தங்களை நேர்மையான வணிகர்களாகக் காட்டிக் கொள்வதாகவும் தெரிவித்தனர். இத்தகைய கடத்தல் கும்பல்கள் கிழக்கு கனடா முழுவதும் கார் திருட்டுகள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளனர்.