யிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான முறையான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெகுவிரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஒருசிலர் இது தொடர்பாக நூல் வெளியிட்டு திசைதிருப்ப முயன்றாலும், உண்மை மறைக்கப்படாது என அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச ரீதியில் நிலவும் மத்திய கிழக்கு மோதல் சூழலை இலங்கை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்த அவர், அதன் விளைவாக ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பொருளாதார நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களே இன்று ஊழல் பற்றிப் பேசுவது ஆச்சரியமளிப்பதாகச் சாடிய அவர், அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் திரட்ட எதிர்க்கட்சிகள் முயன்றாலும், மக்கள் அரசாங்கத்தைப் பாதுகாக்கவே முன்வருவார்கள் என நம்பிக்கை வெளியிட்டார்.
வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5, 2026) நடைபெற்ற 55 ஆவது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்