யாழ். திருநெல்வேலி பனிக்கர் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு சபாரத்தினம் திருஞானசெந்திலால் (குட்டி) அவர்கள் நேற்று 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா கௌரிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷியா(பிரதம நூலகர் பொது நூலகம், யாழ்ப்பாணம்), லாவண்யா(அவுஸ்திரேலியா), ரதிப்பிரியா(இலங்கை வங்கி, புன்னாலைக் கட்டுவன் கிளை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகரன்(இறைவரித் திணைக்களம் வடமாகாணம், கைதடி), ரூபகாந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ்வரன், லக்ஷ்மணலால், ரவீந்திரலால்(குஞ்சுகண்ணா), பாலச்சந்திரலால், சுந்தரிங்கம், சந்திரபோஸ் மற்றும் ஜெயலக்சுமி, பங்கையற்செல்வி(அவுஸ்திரேலியா), அம்பலவாணர், குபேரலால்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகேந்திரன் அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம்(GS) அவர்களின் அன்பு மைத்துனரும்,
குணசிங்கம், பூபாலசிங்கம், செல்வராணி, இரத்தினசிங்கம்(கனடா), ஆனந்தராஜா(பிரித்தானியா), வசந்தராணி, வரதராஜா, பத்மராணி, ஸ்ரீகந்தராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கவிஷ்ணா(யா/வேம்படி மகளிர் கல்லூரி), அக்ஷரன்(யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி), சகீத்(அவுஸ்திரேலியா), சஜனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2026 புதன்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
Mobile: +94768707911
Mobile: +94776469882