அறிவிப்பு-மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் குடியிருப்புக்களை “சட்டபூர்வமான இலக்குகளாக” (Legitimate targets) கருதுவதாகவும், அவற்றின் மீது தாக்குதல்களை நடத்தவுள்ளதாகவும் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய நகரங்களில் உள்ள குடியிருப்புக்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஈரான் இராணுவப் பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி (Ebrahim Zolfaghari) தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிக்கை: இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகையில், “ஈரானில் உள்ள சிவிலியன் வீடுகள் மீது எதிரி நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியத்திலுள்ள அமெரிக்க-இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் தளபதிகளின் வீடுகள் மீது குண்டுவீச்சைத் தொடங்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசியல்வாதிகள், இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் தங்குமிடங்கள் இனி ஈரானிய ஆயுதப் படைகளின் இலக்குகளாக இருக்கும் என வீடியோ அறிக்கை ஒன்றின் மூலம் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.