நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு, சிறுமியைத் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி, விகாரை வளாகத்தில் வடிகட்டிய நீரினைப் பெறுவதற்காக சனிக்கிழமை சென்ற வேளை, விகாரைக்குப் புதிதாக வந்த இளநிலை பிக்கு அச் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில், தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த இளநிலை பிக்குவைக் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர். இதன்போது பிக்குவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.