தவெக தலைவர் விஜய் அரசியல் விமர்சகர் மற்றும் தி.மு.க மீது காட்டமான விமர்சனம்

தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் திமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். தவெகவைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், பெருமதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் பெண்களை வக்கிரமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மாபெரும் மனிதர்களிடம், சிறந்த பொறுப்பில் வேலை செய்தவர் என்றெல்லாம் சொன்னாலும், பின்னாளில் திமுக ஆதரவாளராக மாறிய பிறகு அடிப்படை அறமும், தேவையான மனித மாண்பும் துளியும் அற்றவராகவே பொன்ராஜ் செயல்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது. எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை, ஊடகத்திற்கு முன் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இதுபோல் பேசுகிறார் என்றால் திமுக அதிகார பின்புலம் இல்லாமலா என்ற சந்தேகம் எழுகிறது?

இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் திமுகவுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களைத் தனது அமைதியின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?

கண்ணியத்துக்குரிய தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து பதற்றமான சூழலைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அநாகரிக அரசியலின் உச்சமாக தமிழக பெண்கள் மீது மோசமான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ள கருத்து எந்த நிலையிலும் ஏற்கக் கூடியதல்ல. தான் பேசிய கருத்துக்கு பொன்ராஜ், உடனடியாக தமிழக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், பெண்கள் மீது மோசமான பார்வை கொண்டவர்களுக்கு தங்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள் தமிழக மகளிர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Vaal veddu

வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்; யாழ்.பண்ணையில் சம்பவம்!

March 26, 2026

யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(26.03.2026) இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட

sara

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயைக் கைது செய்தமை தேசத்துரோக செயல்

March 26, 2026

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் கைது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள்

jail

முல்லைத்தீவு- மந்துவில் பகுதியில் 56 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: ஐவர் கைது

March 26, 2026

முல்லைத்தீவு- மந்துவில் பகுதியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களும், சில

Andra

ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து: 14 பேர் உடல் கருகிப் பலி

March 26, 2026

ஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்தது.

jud

2002ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐவர் கொலை வழக்கில் இருவருக்கு மரண தண்டனை!

March 26, 2026

2002ஆம் ஆண்டு தனமல்வில பகுதியில் இடம்பெற்ற ஐவர் கொலைச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கும் மொனராகலை

Thiru

கலஹா பாடசாலைக்கு திருவள்ளூவர் சிலை அன்பளிப்பு!

March 26, 2026

மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை அமைப்பின் மூலமாக, கண்டி – கலஹா, தெல்தோட்டை குறுப் திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு திருவள்ளுவர் சிலை

Cr

இந்தியா செல்லும் இலங்கை அணி

March 26, 2026

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி இந்த வருட இறுதியில் இந்தியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. குறித்த தொடருக்கான அட்டவணையை

DRO

நாளை முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!

March 26, 2026

ளை (27) முதல் மறு அறிவித்தல் வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொது மக்கள் சேவையினையும்

kalla

மட்டு.கல்லடிப் பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

March 26, 2026

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் இன்று (26) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியில் சடலமொன்று மிதப்பதைக்

Arju

நாடாளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனா இராமநாதன் தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதி வாதத்திற்கான திகதி அறிவிப்பு

March 26, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான

Hu

இஸ்ரேலால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கடற்படை தளபதி யார்?

March 26, 2026

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப்

iran ai

ஈரான் வான்பரப்பில் போர் விமானத்தை நோக்கி ஏவுகணை

March 26, 2026

ஈரானின் ஓமன் வளைகுடா கடற்கரையில் உள்ள சாபஹார் (Chabahar) நகருக்கு அருகே, போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தும் முயற்சி