பெண் கொலை மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் ; சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை

மட்டக்களப்பில் பெண் கொலை மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை 4 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 20-ஆம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டு, அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

பின்னர் அவர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லியடி வயல் பிரதேச கிணறு ஒன்றினுள் வீசப்பட்டிருந்தார். இதே கிணற்றிலிருந்து ஏற்கனவே காணாமல் போனதாக கருதப்பட்ட மற்றொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.

இந்தக் கொடூரச் சம்பவங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி. மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை நடத்தி, பிரதான சந்தேகநபர்கள் மூவர் உட்பட ஐந்து பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாமல் போனதால், நீதவான் அண்ணாத்துறை தர்சினியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், பிரதான சந்தேகநபர்கள் மூவரையும் 04 நாட்களுக்குப் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கினார்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் 27-ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ceb

மீண்டும் மின்வெட்டு

March 24, 2026

மின்சார உற்பத்திக்காக தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதனால் இதுவரை மின்வெட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு

rea

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் போராட்டம்

March 24, 2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8

phil

எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

March 24, 2026

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக

ca

கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

March 24, 2026

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,

fi

அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

March 24, 2026

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

vidu

விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில்

March 24, 2026

திமுக தலைமையிலான கூட்டணியில் பங்கு பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான தேர்தல் கூட்டணி

Death-2

தீயைக் கட்டுப்படுத்த முயன்ற விவசாயி உயிரிழப்பு

March 24, 2026

அம்பாந்தோட்டை, வீரவில – கங்கசிறிகம பகுதியில் தனது வயலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முயன்ற 63 வயதுடைய விவசாயி ஒருவர்,

gold

சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள்; தங்கத்திற்கான விலை நிர்ணயத்தில் மாற்றங்கள்!

March 24, 2026

உலகப் பொருளாதாரம் ஒரு பக்கம் தள்ளாட்டத்தில் இருக்க, மறுபக்கம் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக

robe

மயக்க மருந்தை குளிர்சாதன இயந்திரத்தினுள் செலுத்தி கொள்ளை

March 24, 2026

திருகோணமலை, வித்தியாலய ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து செலுத்திப் பொருட்களைக்

wa

கடும் வறட்சி; குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

March 24, 2026

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக ஹட்டனில் பகுதியில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுமென நுவரெலியா

Poli

இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்!

March 24, 2026

பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள்

AL

ஏப்ரல் 24 வரை 2026 உ/த பரீட்சைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

March 24, 2026

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம்