நிவாரண சேவைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டதா?

கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இன்று (27) முதல் டித்வா அனர்த்த நிவாரணப் பணிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

நிவாரண மதிப்பீடுகளுக்கான முறையான சுற்றுநிருபங்கள் இல்லாமை, வாக்குறுதி அளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் உப்புல் குமார, டித்வா நிவாரணச் செயல்முறைக்கு இதுவரை முறையான பொறிமுறை ஒன்று இல்லை எனக் குறிப்பிட்டார்.

இதன்படி, இதில் நேரடியாக ஈடுபட்டுள்ள நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் சங்கங்கள் மற்றும் சேத விபரங்களை மதிப்பீடு செய்யும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து, இந்த நிவாரணப் பணிகளை முன்னெடுப்பது குறித்துக் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், டித்வா அனர்த்தம் இடம்பெற்று 95 நாட்கள் கடந்துள்ள போதிலும், அனர்த்த நிவாரணப் பணிகளைச் சரியாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தால் இதுவரை நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனத் தெரிவித்த அவர், அதற்கமைய அனைத்துத் தரப்பினரும் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகக் கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் உப்புல் குமார,

இனி எங்களுக்குச் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை தேவையில்லை என நாங்கள் ஜனாதிபதியிடம் கூறுகின்றோம். செயலாளர்களுடன் பேசி அந்த கோரிக்கைகளை முன்வைத்து முடித்துவிட்டோம். எனவே, எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, வழிகாட்டல் ஆலோசனைகள் தயாரிக்கப்படும் வரை மற்றும் கொடுப்பனவுகள் கிடைக்கும் வரை இன்று முதல் அனைத்து கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் டித்வா நிவாரணப் பணிகளிலிருந்து முழுமையாக விலகுகிறோம். எனத் தெரிவித்தார்.

phototune.ai_1795493634

பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்பபில் போதைப்பொருள் பாவனை?

November 24, 2026

சம்மாந்துறை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்புப் பகுதியில் இரவு வேளைகளில் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோதச் செயற்பாடுகள்

download

2027 ஆம் ஆண்டுக்காக மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள்!

November 24, 2026

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம்

phototune.ai_1795493805

விசுவமடுவில் 180 மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு!

November 24, 2026
WhatsApp Image 2026-11-24 at 09.23.18

பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

November 24, 2026

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் அஞ்சலி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் நகரின்

WhatsApp Image 2026-11-24 at 09.23.18

பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

November 24, 2026

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் அஞ்சலி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் நகரின்

fsfd

சாவகச்சேரி மாவீரர் தின நிகழ்வவில் இடையூறு ஏற்படாது!

November 24, 2026

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களை, சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்துக்கு

s

இன்று விளக்கீடு; தமிழர்களின் தொன்மையான ஆன்மீகப் பாரம்பரிய விழாக்களில் ஒன்று

November 24, 2026

கார்த்திகை தீபம் என்பது தமிழர்களின் தொன்மையான ஆன்மீகப் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும். இருளை அகற்றி ஒளியை ஏற்றும் இவ்விழா, சிவபெருமானின்

parliment

பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் நிறைவேற்றம்

November 24, 2026

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாம்

strike

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்

November 24, 2026

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின்

kachc

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

November 24, 2026

உலகச் சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலைகள் கடந்த ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னர் குறைந்த மட்டத்தில்

MediaFile_20261123_123204_655

இடைக்காலக் கொடுப்பனவு தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – மஹிந்த ஜயசிங்க

November 24, 2026

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இடைக்காலக் கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு கோரி நேற்று (23) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க

dfgs

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

November 24, 2026

இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் சுமார் அரைவாசிப் பேர் (49.3%) எவ்வித முறையான உதவியையும் நாடவில்லை