பௌத்த மகா சங்க மாநாடு; அரசியல் நோக்கமற்றது – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

பௌத்த மகா சங்க மாநாடு எந்தவொரு அரசியல் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படவில்லை. இந்த மாநாட்டை நடத்துவதற்கான பிரதான நோக்கம் நாட்டின் கலாச்சாரம், மொழி மற்றும் நாகரிகத்தைப் பாதுகாப்பதேயாகும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அகில இலங்கை பௌத்த மகா சம்மேளன அலுவலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

குறிப்பாக மிஹிந்து தேரர் கொண்டு வந்த பௌத்த விழுமியங்கள் தற்போது சிதைந்து வருகிறது. அதை அரச தலைவர்களுக்குச் சுட்டிக்காட்டவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாறாக இதில் எமக்கு எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது. பௌத்த மதத்தையோ அல்லது பௌத்த கலாசாரத்தையோ அழித்துவிட்டு எவராலும் இந்த நாட்டில் ஆட்சி செய்ய முடியாது.

தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தும், பௌத்த உரிமைகள் பறிபோவது குறித்தும் நாம் எமது கவலையை வெளிப்படுத்துகின்றோம். கடந்த காலங்களில் சீகிரியா போன்ற இடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது மகா சங்கத்தினர் தலையிட்டுப் பாதுகாத்ததை அவர் நினைவூட்ட விரும்புகின்றோம்.

சமூக ஊடகங்களில் பௌத்த மதத்திற்கு எதிராகவும், புத்தர் சிலைகளை அவமதிக்கும் வகையிலும் வெளியாகும் பதிவுகள் குறித்து எமது கடும் அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தகையச் செயல்களைப் பார்த்துக்கொண்டு மகா சங்கத்தினர் அமைதியாக இருக்க முடியாது. இதற்கு அரச தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால் அதற்காக இந்த மாநாட்டை நிறுத்தப் போவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், பொலிஸார் மூலமாகவோ அல்லது சட்ட நடவடிக்கைகள் மூலமாகவோ அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான இந்தப் பயணத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றார்.

i

இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

April 17, 2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம்

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்

chac

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

April 17, 2026

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார

up

15 வயது மாணவி சடலமாக மீட்பு

April 17, 2026

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம்

im

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

April 17, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”